இந்திய அணியில் விளையாடாமல் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாக இருக்கும் 5 இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் புதுப்புது வீரர்கள் விளையாடி வருகின்றனர். சென்ற வருட ஏலத்திலும் இந்த வருட ஐபிஎல் தொடருக்காக புதிய வீரர்கள் இளம் வீரர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அப்படி புதிதாக ஐபிஎல் தொடரில் ஆட போகும் இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.

Virat singh

- Advertisement -

விராட் சிங் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) :

இவர் 22 வயதான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஆவார். இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியவர். 2001ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 335 ரன்களும், சையது முஷ்டாக் அலி கோப்பையில் 343 ரன்கள் எடுத்தார். இதற்காக இவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.9 கோடி கொடுத்து தனது அணியில் எடுத்துள்ளது.

Bishnoi

ரவி பிஷ்னோய் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) :

- Advertisement -

இவர் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். உள்ளூர் போட்டிகளிலும் நன்றாக ஆடிவருகிறார் ஏற்கனவே சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 2 கோடி கொடுத்து எடுத்துள்ளது.

Porel

இஷான் பொரல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) :

- Advertisement -

இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 25 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 61 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 லட்சம் கொடுத்து எடுத்துள்ளது.

jaiswal 1

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) :

- Advertisement -

இவர் மும்பை உள்ளூர் அணியின் இடதுகை அதிரடி ஆட்டக்காரர். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் துவக்க வீரர். அதிக திறமை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இவரை 2.4 கோடி கொடுத்து எடுத்துள்ளது.

Padikkal

தேவதூத் படிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) :

இவர் கர்நாடக அணியின் தொடக்க வீரர் ஆவார். 20 வயதான இவர் உள்ளூர் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார். இதன் காரணமாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை 20 லட்சம் கொடுத்து இந்த வருடம் எடுத்துள்ளது.

Advertisement