இந்திய ஒருநாள் அணியில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத 5 டெஸ்ட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

test
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரையில் டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம் ஆகும். ஜாம்பவான் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், சௌரவ் கங்குலி, ஹர்பஜன்சிங், அனில் கும்ப்ளே என பல முன்னணி வீரர்கள் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் பார்மேட்டில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிக அரிதான விஷயமாக அப்போது இருந்தது. இப்போதும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் பார்மெட்டில் உலகின் தலை சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஒவ்வொரு வீரர்களும் மெனக்கெட வேண்டி வரும்.டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுவதன் மூலம் ஒருநாள் தொடர்களில் விளையாட சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

Nadeem-1

சபாஷ் நதீம் :

2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக நதீமுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. பஸ்ட் கிளாஸ் கிரிகெட் நன்றாக விளையாடி இதன் பலனாக அவருக்கு இந்த வாய்ப்பு இந்திய கிரிக்கெட் கொடுத்தது. தனது முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய நதீம் , பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் இரண்டு வருடங்கள் வாய்ப்புக்காக காத்திருந்தார்.
அதன் பின்னர் இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதையும் வீணடித்ததன் காரணமாக மீண்டும் உட்கார வைக்கப்பட்டார். அறிமுகமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் நதீம் தனது முதல் ஒருநாள் போட்டி அழைப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

Vihari

ஹனுமா விஹாரி :

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள விஹாரி நான்கு அரை சதங்கள் மற்றும் ஒரு சதமும் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆவரேஜ் 32.84 ஆகும், மேலும் அவர்கள் ஸ்ட்ரைக் ரேட் 42.56 ஆகும்.இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினுடன் ஜோடி போட்டுக் கொண்டு 161 பந்துகளை பிடித்து வெறும் 23 ரன்கள் மட்டும் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய மிகப் பெரிய அளவு உதவினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வந்துள்ள விஹாரிக்கு இன்னும் ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

abhinav mukund

அபினவ் முகுந்த் :

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இந்திய அணிக்காக விளையாடிய அபினவ் முகுந்த் அடிப்படையில் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆவார். ரஞ்சித் காபி தொடரில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேலாக விளையாடியுள்ள அபினவ் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது.

- Advertisement -

Iqbal

இக்பால் சித்திக் :

அபினவ் முகுந்த் போல ஓபனிங் பேட்ஸ்மேன் ஆனான சித்திக்க் இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். சித்திக் இங்கிலாந்துக்கு எதிராக இந்த போட்டியை விளையாடினார். இரண்டு பந்துகளில் 5 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி அடையச் செய்த இக்பால் சித்திக் அதன்பிறகு எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

david johnson

டேவிட் ஜான்சன் :

கர்நாடகாவைச் சேர்ந்த டேவிட் ஜான்சன் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி உள்ளார். 1986 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய ஜான்சன் இரண்டு போட்டிகள் சேர்த்து 8 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பிறகு எந்த விதமான சர்வதேசப் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் விளையாடவில்லை.

Advertisement