இவங்கெல்லாம் கூட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி இருக்காங்களா ? – ஆச்சரியப்படவைக்கும் 5 வீரர்கள்

Test
- Advertisement -

ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் 60 பவர் ஒருநாள் போட்டிகள் வந்தது. அதுவும் 50 ஓவர் ஆக மாறியது பின்னர் கடந்த 15 வருடமாக டி20 போட்டிகளில் மவுசு அதிகரித்துள்ளது. தற்போது மூன்று விதமான பார்மட்களில் கிரிக்கெட் விளையாடபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த 15 வருடங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் வீரராக இருந்து விட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி நம் கண்ணிற்குத் தெரியாத சில வீரர்கள் உள்ளனர் அவர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Pujara-2

புஜாரா :

- Advertisement -

இந்தியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக தற்போது இருப்பவர் அடுத்த சுவர் என்று புகழப்பட்டவர் இதன் காரணமாகவே இவரால் பெரிதாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட முடியவில்லை. தற்போது இவருக்கு 32 வயதாகிறது. கடைசியாக 2013ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடினார் புஜாரா. அப்போது இந்தியா சுரேஷ் ரெய்னா தலைமையிலான இரண்டாம்தர அணியை வங்கதேசத்திற்கு அனுப்பியது .அதில்தான் இவரிடம் பெற்றார். ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இது வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் அதுவும் 39.23 ஸ்டிரைக் ரேட்டில். இதன் காரணமாக அவரால் மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.

abbas

முகமது அப்பாஸ் :

- Advertisement -

இவர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் அவர் 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 84 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது 31 வயதான இவர் பெரிதாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரிதாக ஆடியதில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார் .இதன் காரணமாக லிமிட்டட் ஓவர் தொடர்களில் இருந்து பாகிஸ்தானால் தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

elgar

டீன் எல்கர் :

- Advertisement -

கடந்த 8 வருடங்களாக தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் போட்டிகளுக்கு சிறந்த துவக்க வீரராக இருப்பவர். தற்போது 34 வயதான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அப்போது 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் சராசரி 17.33 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 58.5 ஆகும் அதன்பின்னர் வங்கதேச அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடினார் .மீண்டும் இவரால் தென்னாப்பிரிக்க லிமிட்டட் ஓவர் அணிக்காக ஆட முடியவில்லை.
.
watling 1

பிஜே வாட்லிங் :

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஆன இவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு டீன் எல்கர் எப்படியோ அதே போல்தான் நியூசிலாந்து அணிக்கு பிஜே வேட்லிங். 70 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டார். 3658 ரன்கள் 8 சதங்கள் அடித்து விட்டார். தற்போது 34 வயதாகிறது ஆனால் 2009ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 28 ஒருநாள் போட்டிகளில் ஆடி வெறும் 24 மட்டுமே சராசரி வைத்திருக்கிறார்.

brathwaite

க்ரெய்க் ப்ராத்வ்யிட் :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடியவர்களில் இவரும் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 4141 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2016 மற்றும் 17 ஆண்டுகளில் 10 ஒருநாள் போட்டிகளில் ஆடினார். மொத்தம் 278 ரன்கள் மட்டுமே எடுத்தார் . ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்தார் இதன் காரணமாக மீண்டும் இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 50 ஓவர்களில் இடம் பிடிக்க முடியவில்லை.

Advertisement