அடுத்த ஐ.பி.எல் தொடரில் ஸ்ரீசாந்தை ஏலத்திற்கு எடுக்க விரும்பும் 5 ஐ.பி.எல் அணிகள் – லிஸ்ட் இதோ

Sreesanth
- Advertisement -

சையது முஷ்டாக் அலி டி20 தொடர் வருகின்ற ஜனவரி 10 முதல் 31 வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்தின் தடைகள் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் முதல் தரப் போட்டிகளில் அவர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். தனது தடை காலத்திற்குப் பிறகு முதன்முதலாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரள அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுள்ளார். இதற்காக ஸ்ரீசாந்த் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

வலைப்பயிற்சியில் ஸ்ரீசாந்த் தனது பவுலிங் மூலம் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தனது கிரிக்கெட்டில் கால் பதித்துள்ள ஸ்ரீசாந்தை 2021 ஐபிஎல் தொடரில் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள 5 ஐபிஎல் அணிகள் பற்றி பார்ப்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

ஐதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் பின்னடைவை பெற்றுள்ளது. ஏனென்றால் ஐதராபாத் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் கடந்த ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டு தற்போது வரை கிரிக்கெட் விளையாட முடியாமல் இருக்கிறார். இதனால் ஐதராபாத் அணியில் நடராஜன், சந்தீப் சர்மா, பேசில் தம்பி, பில்லி ஸ்டென்லேக், ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் வரிசையில் ஸ்ரீசாந்தும் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

பெங்களூர் அணியிம் தற்போது பந்துவீச்சில் மிக மோசமான நிலையில் தான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருக்கிறார். இது பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது. இதனால் பெங்களூர் அணியில் ஸ்டெயின் பங்கை ஸ்ரீசாந்த் நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

Sreesanth 1

சென்னை சூப்பர் கிங்ஸ் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது. தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் இருக்கும் சென்னை அணியில் ஸ்ரீசாந்த் இணைவது மேலும் பலம் சேர்க்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை கொண்டிருக்கிறது. வருண் ஆரோன், ஜெய்தேவ் உனட்கட், மற்றும் அங்கித் ராஜ்பூட் போன்றவர்கள் ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீசாந்த் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றால் ஆர்ச்சர் மற்றும் ஸ்ரீசாந்தின் ஜோடி சிறப்பாக இருக்கும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :

பஞ்சாப் அணிக்கு முகமது சமி மற்றும் கிரிஸ் ஜோர்டன் ஆகிய இரு முக்கிய பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட கூடிய ஒரு பந்துவீச்சாளரை பஞ்சாப் அணியை தேடி வருகிறது. இதற்கு ஸ்ரீசாந்த் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றுகிறது. அதுமட்டுமின்றி ஸ்ரீசாந்த் தனது தடை காலத்திற்கு முன்னர் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement