ஒருநாள் போட்டியில் அதிக பந்துகளை விழுங்கி அரைசதம் அடித்த 5 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் வீரர்கள் அரை சதத்தை எளிதாக எடுத்து விடுவார்கள். ஆனால் மெதுவாக ஆடி அணியின் வெற்றிக்கு ஏற்ப விளையாடி அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலை தற்போது பார்ப்போம். ஆனால் சில சமயம் இதுபோன்று அடிக்கப்படும் அரைசதங்களால் நாம் தோல்வியை தழுவி இருப்பதையும் கண்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகமது கைஃப் (98பந்துகள்) :

2003ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் மொத்தம் 98 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 123 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

Ganguly

சௌரவ் கங்குலி (104பந்துகள்) :

- Advertisement -

அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போனவர். ஆனால் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை தொடரில் 104 பந்துகளில் அரைசதம் அடித்தார். சௌரவ் கங்குலி இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 129 பிடித்து 66 ரன்கள் எடுத்திருந்தார் சௌரவ் கங்குலி.

Ganguly-1

சௌரவ் கங்குலி (105 பந்துகள்) :

- Advertisement -

மீண்டும் இந்த பட்டியலில் இடத்தை பிடித்துள்ளார். சௌரவ் கங்குலி 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 220 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதில் 105 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார் சௌரவ் கங்குலி.

Dhoni 1

மகேந்திர சிங் தோனி (108 பந்துகள்) :

- Advertisement -

89 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி அடிக்க வேண்டி இருந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் நங்கூரமிட்டு நின்றார் தோனி. இந்த போட்டியில் 108 பந்துகளில் சதமடித்தார். ஆனாலும் இந்திய அணி இந்த போட்டியில் தோற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

sadgopan-ramesh

சடகோபன் ரமேஷ் (110 பந்துகள்) :

தமிழக வீரரும், முன்னாள் இந்திய அணியின் இடதுகை துவக்க வீரருமான சடகோபன் ரமேஷ் கென்யா அணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 110 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement