ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேறிய பின்னர் ஐ.பி.எல் கோப்பையை வென்ற 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rcb

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை, 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறிச் சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல் தொடர்களில் மற்ற அணிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல வீரர்கள், பெங்களூர் அணியில் இருந்தபோது மிக மோசமாக விளையாடிய காரணத்தினால் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பதிவில் பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், மற்றொரு அணியில் இடம்பிடித்து ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்து வீரர்களைப் பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம்.

pandey rcb

மனிஷ் பாண்டே:

- Advertisement -

2009 ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் இடம்பிடித்த இவர், அந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சதமடித்து ஐபிஎல் தொடர்களில் முதலாவதாக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமைய் பெற்றார். 2010ஆம் ஆண்டு தொடருக்குப் பின் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கௌதம் கம்பீர் தலமையிலான கொல்கத்தா அணி அந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அந்த இறுதிப் போட்டியில் 94 ரன்கள் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்ததும் மனிஷ் பாண்டேதான்.

dekock rcb

குயின்டன் டீ காக்:

- Advertisement -

2018ஆம் ஆண்டு பெங்களூர் அணியிடமிருந்து ட்ரேடிங் மூலமாக இவரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு சென்ற பின்னர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இடத்திற்கு தவிர்க்க முடியாத வீரராக மாறும் அளவிற்கு தனது திறமையை வெளிக்காட்டினார் குயின்டன் டீ காக். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் சென்ற பின் அந்த அணியானது 2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

yuvi rcb

யுவராஜ் சிங்:

2014ஆம் ஆண்டு அதிக தொகை கொடுத்து யுவாராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்தது பெங்களூர் அணி. அந்த தொடரில் அற்புதமாக ஆடிய அவரை அடுத்த ஆண்டு ரீட்டெய்ன் செய்யாமல் ஏலத்தில் விட்டது பெங்களூர் அணி. அதற்குப் பிறகு டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடிய அவர் இறுதியாக, 2019ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kallis rcb

ஜாக்யூஸ் கலீஸ்:

2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த கலீசை, 2011ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. கொல்கத்தா அணியில. அவர் இடம்பிடித்த பின்னர், அந்த அணியானது 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. அந்த இரண்டு தொடர்களிலும் ஜாக்யூஸ் கலீஸ் அந்த அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்தார்.

watson

ஷேன் வாட்சன்:

2017ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடிய இவரை 2018ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை அணி கைப்பற்ற மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ஷேன் வாட்சன், இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கியும் அசத்தினார். இவர் ஏற்கனவே 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement