முழுநேர பந்துவீச்சாளராக அறிமுகமாகி கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக மாறிய டாப் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

jayasuriya
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டிற்கு தங்களது அணிக்காக நுழையும்போது ஒரு சில வீரர்கள் பந்துவீச்சாளர்களாக தங்களது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார்கள். அதன் பின்னர் பிற்காலத்தில் தங்களது பேட்டிங்கையும் மேம்படுத்தி அதில் சிறப்பாக செயல்பட்டு தற்போது மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக மாறியிருக்கின்றனர். அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியலில் 5 வீரர்களை பற்றி தற்போது இந்த பதிவில் பார்ப்போம்., மேலும் இந்த லிஸ்ட்டில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்ற கமெண்ட்டையும் பதிவிடலாம் நண்பர்களே…

Smith

- Advertisement -

ஸ்டீவன் ஸ்மித் :

இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 2010ஆம் ஆண்டு ஒரு சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் அவரிடம் பேட்டிங் திறமையும் இருந்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய அணி அவரை சரியான பேட்டிங் பொசிசனில் இறக்கிவிட்டது. அதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவன் ஸ்மித் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். தற்போது வரை 237 சர்வதேச போட்டிகளில் விளையாடி 12 ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறார். அதனை தாண்டி 62 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

White

கேமரூன் வைட் :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக 2005ஆம் ஆண்டு அறிமுகமான இவர் சுழற்பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் நன்றாக பேட்டிங் செய்ததால் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார். தற்போது வரை 102 சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி 3000 ரன்களை அடித்து 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

ரவி சாஸ்திரி :

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். காலப்போக்கில் ஆல்-ரவுண்டராக மாறி 230 சர்வதேச போட்டிகளில் ஆடி கிட்டத்தட்ட 7000 ரன்கள் அடித்து இருக்கிறார். மொத்தம் 280 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

malik

சோயப் மாலிக் :

- Advertisement -

1999 ஆம் ஆண்டு அறிமுகமான சோயப் மாலிக் ஒரு வலதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அதன் பின்னர் ஆல்-ரவுண்டராக மாறி தற்போது பாகிஸ்தான் அணியின் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாறிவிட்டார். 435 சர்வதேசப் போட்டிகளில் ஆடி 17530 ரன்கள் அடித்ததுடன் 218 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Jayasuriya

சனத் ஜெயசூர்யா

1985 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக இடது கை சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானவர். இவர் அதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தின் காரணமாக அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கினார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்ற ஜெயசூர்யா 555 சர்வதேச போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரன்களை அடித்து இருக்கிறார். 427 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

Advertisement