இந்த வருட ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடிக்க காத்திருக்கும் 5 முரட்டு ஹிட்டர்ஸ் – லிஸ்ட் இதோ

ABD-1
- Advertisement -

ஐபிஎல் தொடர் என்றாலே வானவேடிக்கை தான். இந்தியாவில் உள்ள மைதானங்கள் சரியான அளவில் இருக்கும். இதனால் அதிக பட்சமாக கடந்த பல வருடங்களில் சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பெங்களூரு மைதானத்தில் ஏகப்பட்ட சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளிநாட்டில் நடப்பதால் இந்த ஒவ்வொரு மைதானங்களும் வித்தியாச வித்தியாசமான அளவுடன் இருக்கும். இருந்தாலும் இங்கும் அதிக சிக்ஸர்கள் அடிக்க வாய்ப்புள்ள 5 வீரர்களை பற்றி பார்ப்போம்

Russell

- Advertisement -

ஆன்ட்ரே ரசல் :

கொல்கத்தா அணியின் வீரர் அவர் 2019ஆம் ஆண்டு அதிக மதிப்புமிக்க வீரர். கடந்த முறை 52 சிக்சர்கள் அடித்து இருந்தார். மேலும் 54 போட்டிகளில் ஆடி 120 சிக்சர்கள் அடித்து இருக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரிலும் இவர் பட்டையை கிளப்புவார் என நம்புவோம்

Maxwell

கிளன் மேக்ஸ்வெல் :

- Advertisement -

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துணை கேப்டன். இவர் அதிரடியாக ஆடி சிக்சர்கள் அளிப்பதில் வல்லவர். ஐபிஎல் தொடரில் மட்டும் இவர் தற்போது வரை 91 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்.

Warner

டேவிட் வார்னர் :

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரரான இவர் அதிரடியாக ஆடுவதில் வல்லவர் என்பதால் இவர் நிறைய சிக்ஸர் அடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் நிறைய பந்துகளை இவரால் எளிதாக அடிக்க முடியும் . சென்றமுறை 21 சிக்சர்கள் அடித்து இருந்தார். இந்த முறையும் இவர் பல சிக்ஸர் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ABD

ஏபி டிவில்லியர்ஸ் :

- Advertisement -

இவரை பற்றி பெரிதாக சொல்ல தேவையில்லை. அந்த அளவிற்கு அதிரடியாக ஆடுவதில் வல்லவர். ஐபிஎல் தொடரில் மட்டும் தற்போது வரை 212 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இந்த வருடமும் இவரது வான வேடிக்கையை அதிகம் பார்க்கலாம்.

Dhoni

எம்எஸ் தோனி :

ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பெரிதாக அழுத்தம் இருக்காது. அதிரடியாக ஆட வாய்ப்புகளும் கிடைக்கும். ஏற்கனவே சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை. அந்த இடத்தை எடுத்துக் கொண்டால் இந்த முறை நூற்றுக்கணக்கான சிக்ஸர்களை நாம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

Advertisement