ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்டு சாதனை படைத்த – 5 அதிரடி மன்னர்களின் பட்டியல்

Six
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.

IPL
IPL Cup

இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

சிக்ஸர் மன்னர்கள்:
பொதுவாக ஐபிஎல் என்றால் கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகில் நடைபெறும் உலகக் கோப்பை உள்ளிட்ட இதர தொடர்களை காட்டிலும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பேட்ஸ்மேன்கள் அதிகப்படியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு த்ரில் விருந்து மழை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

chris gayle
chris gayle

1. கிறிஸ் கெயில் : வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் காலம் காலமாக பல சிக்ஸர்களை பறக்கவிட்டு உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப் உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடிய அவர் 147 போட்டிகளில் பங்கேற்று 357 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர் என்ற மகத்தான சாதனையை கிறிஸ் கெயில் படைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்து காலம் காலமாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர் முதல் முறையாக இந்த வருடம் ஓய்வு பெற்றுள்ளதால் விளையாட போவதில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாகும்.

- Advertisement -

2. ஏபி டீ வில்லியர்ஸ்: கிரிக்கெட் கண்ட மகத்தான பேட்ஸ்மேனாக கருதப்படும் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் வித விதமான புதிய ஷாட்டுகளை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். குறிப்பாக எப்பேர்பட்ட உலகத்தரம் வாய்ந்த பவுலர் எவ்வளவு கடினமான பந்துகளை வீசினாலும் அதை மைதானத்தின் எந்த ஒரு திசைக்கும் லாவகமாக சிக்ஸராக பறக்க விடுவதில் இவருக்கு நிகர் யாருமே கிடையாது எனக் கூறலாம்.

Divilliers

இதனால் ரசிகர்களிடையே மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் எனப் பெயர் பெற்ற இவர் 184 ஐபிஎல் போட்டிகளில் 257 சிக்சர்களை விளாசி இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவரும் ஓய்வு பெற்றதன் காரணமாக இந்த வருடம் விளையாட போவதில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்தியாகும்.

- Advertisement -

3. ரோஹித் சர்மா: மேற்குறிப்பிட்ட கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் உலக அளவில் சிக்ஸர் கிங் என்றால் ரோகித் சர்மா இந்தியாவின் சிக்ஸர் கிங் என்று அழைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்து மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள இவர் 213 ஐபிஎல் போட்டிகளில் 227 சிக்சர்களை அடித்து இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர் ஆவார்.

rohith 1

4. எம்எஸ் தோனி: மேலே குறிப்பிட்ட வீரர்கள் அனைவரும் ஓப்பனிங் அல்லது டாப் ஆர்டர் வரிசையில் களமிறங்கி அவ்வளவு சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்தியா கண்ட மகத்தான கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி பெரும்பாலும் சவால் நிறைந்த கடைசிகட்ட ஓவர்களில் களமிறங்கி மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு எத்தனையோ போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

dhoni 1

அதன் காரணமாகவே உலக அளவில் ஒரு மிகச் சிறந்த பினிஷெர் என அழைக்கப்படும் இவர் 193 இன்னிங்ஸ்சில் 219 இமாலய சிக்ஸர்களை பறக்க விட்டு இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

5. கிரண் பொல்லார்ட் : வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த மற்றொரு முரட்டுத்தனமான அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட் கடந்த பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் முக்கிய வீரராக விளையாடி வருகிறார்.

Pollard 1

தோனியை போலவே கடைசிகட்ட நேரத்தில் களமிறங்கி பந்துவீச்சாளர்களை வெளுக்கும் இவர் 178 ஐபிஎல் போட்டிகளில் 214 சிக்ஸர்களை விளாசி இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.

Advertisement