ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த டாப் 5 வீரர்கள் இதோ

thaladhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் என்பது கடைசி ஓவரில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. அது போன்ற நிலைமையில் 19 ஓவர்கள் வரை ஒரு அணி சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி ஓவரில் யார் சிறப்பாக செயல்படுகிறாரோ அவர்களுக்கே வெற்றியும் வந்து சேர்கிறது. சாதாரணமாக அதுபோன்ற தருணங்களில் அந்த அணிதான் வெற்றிபெறும் என ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கடைசி ஓவரில் அபாரமாக செயல்படும் ஒரு சில பேட்ஸ்மேன்கள் அசாத்தியம் என்ன நினைக்கப்படும் வெற்றியைக் கூட தங்களது அதிரடியான பேட்டிங்கால் சாத்தியமாக்கி வெற்றிகரமான ஃபினிஷிங் செய்து எதிரணியின் வெற்றியை பறித்து தங்களது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளனர்.

- Advertisement -

இருப்பினும் சேசிங் செய்யும்போது ஏற்படும் கடைசிநேர அதீத பரபரப்பான தருணத்தில் உண்டாகும் அதிகப்படியான அழுத்தத்தால் மிகச்சிறந்த பினிஷர்கள் என கருதப்படும் பேட்ஸ்மேன்கள் கூட தடுமாறுவார்கள். அதேபோல் நிறைய தருணங்களில் கடைசி ஓவரில் 20 – 30 ரன்கள் தேவைப்பட்ட போதும் அதை அதிரடியாக சிக்ஸர்களாக பறக்க விட்டு போராடும் பேட்ஸ்மென்கள் வெற்றிகரமாக முடிக்க முடியாமல் ஒருசில ரன்களில் வெற்றியின் விளிம்பு வரை வந்து தோற்க நேரிடும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் 20-வது ஓவரில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

5. எம்எஸ் தோனி (18 ரன்கள்): 2010 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் அந்த அணி நிர்ணயித்த 193 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு சுரேஷ் ரெய்னா 46 (27) பத்ரிநாத் 53 (36) ஆகியோர் அதிரடியான ரன்கள் எடுக்க 19 ஓவரில் 177/4 எடுத்து வெற்றியை நெருங்கியது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது அதை இர்பான் பதான் வீச முதல் பந்திலேயே பவுண்டரி பறக்கவிட்ட தோனி 2-வது பந்தில் 2 ரன்களையும் அதற்கடுத்த 2 பந்துகளில் மெகா சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 2 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

பொதுவாகவே கூலாக காட்சியளிக்கும் அவர் 54* (29) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்து தனது அணியை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்ததால் வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோசமாக கொண்டாடியதை இன்றும் ரசிகர்கள் மறக்க முடியாது. அதன்பின் பிளே ஆஃப் சுற்றில் அசத்தி இறுதிப் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பையை தோற்கடித்த சென்னை முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Rahul tewatia Rashid Khan

4. ரசித் கான் (18 ரன்கள்): இந்த 2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 196 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சஹா 68 (38) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் மிடில் ஓவர்களில் அசுர வேகத்தை பிரயோகித்த 22 வயது இளம் பவுலர் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை எடுத்து கதி கலங்க வைத்தார். அதனால் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்த வேளையில் ஜோடி சேர்ந்த ராகுல் திவாடியா 40* (21) ரன்களும் ரசித் கான் 31* (11) ரன்களும் விளாசி எதிர்பாராத 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்ஸர் அடித்த திவாடியா அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்துக்கொடுக்க கடைசி 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது யாருமே எதிர்பாரா வகையில் ஒரு பவுலரான ரசித் கான் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 18 ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார்.

3. அக்சர் படேல் (20 ரன்கள்): 2020 ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லிக்கு ஷிகர் தவான் 101* (58) ரன்கள் எடுக்க 19 ஓவரில் 163/5 என்ற நிலைமையை எட்டியது. குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது துரதிர்ஷ்டவசமாக நம்பிக்கை நட்சத்திரம் டுவைன் பிராவோ காயமடைந்த காரணத்தால் ஒரு சுழல் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா வீசிய முதல் பந்தில் ஒயிட் உட்பட ஷிகர் தவான் 2 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அப்போது கடைசி 5 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது புதிதாக களமிறங்கியிருந்த அக்சர் பட்டேல் அதிரடியாக 6, 6, 2, 6 என 20 ரன்களை தெறிக்கவிட்டு மொத்தம் 21* (5) ரன்களை விளாசி சென்னைக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்தார்.

2. ரோஹித் சர்மா (22 ரன்கள்): 2009 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக அந்த அணி நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை துரத்திய அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 43 (31) உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் கணிசமான ரன்கள் எடுத்ததால் 19 ஓவரில் 140/4 ரன்கள் எடுத்தது.

இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது வங்கதேசத்தின் மஷ்ரபி மோர்டசா வீசிய முதல் பந்தே நோ பாலாக அமைய அதில் பவுண்டரி பறக்கவிட்ட ரோகித் சர்மா அதன்பின் 1 லெக் பைஸ், 6, 1ஒய்ட், 2, 4, 6 என (4+6+2+4+6) 22 ரன்களை விளாசி மொத்தமாக 32* (13) ரன்கள் அடித்து டெக்கான் அணிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

1. எம்எஸ் தோனி (22 ரன்கள்): 2016 ஐபிஎல் தொடரில் சென்னை தடைபெற்ற நிலையில் பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை துரத்திய புனே 19 ஓவர்களில் 150/6 என்ற நிலைமையில் இருந்தது. இருப்பினும் களத்தில் கிரிக்கெட்டின் மகத்தான பினிஷராக கருதப்படும் எம்எஸ் தோனி 42* (26) ரன்களுடன் இருக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீச வந்த அக்சர் பட்டேல் முதல் பந்தில் ரன் எதுவும் கொடுக்காமல் 2-வது பந்தில் ஒய்ட் வீசினார்.

அதனால் மீண்டும் வீசப்பட்ட 2-வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட தோனி 3-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் 4-வது பந்தில் பவுண்டரி பறக்கவிட்டார். அதனால் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட்ட அவர் 22 ரன்களை விளாசி (1 ஒய்ட்) 4 விக்கெட் வித்தியாசத்தில் பினிஷிங் செய்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த ஃபினிஷிங் செய்து காட்டினார்.

Advertisement