2008 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

gayle
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் தொடர் 13வது ஐபிஎல் தொடரின் ஒரு சில வீரர்கள் முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார்கள்..கிட்டத்தட்ட 13 வருடம் வரை விளையாடியுள்ள அந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

Dhoni

எம்எஸ் தோனி :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் முதன் முதலாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் இவர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரை 2008ம் ஆண்டு வாங்கியது. பத்து வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், இரண்டு வருடங்கள் புனே அணிக்காக விளையாடியவர் தற்போது 13 ஆவது ஆண்டில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார்.

kohli

விராட் கோலி :

- Advertisement -

2008 ஆம் ஆண்டு 19 வயது சிறுவனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்தார். விராட் கோலி அதனைத் தொடர்ந்து நன்றாக விளையாடியதால் அணி அவரை தக்கவைத்துக் கொண்டது. 2013 ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தற்போது வரை இந்த அணிக்காக தான்விளையாடி வருகிறார் விராட் கோலி.

ரோகித் ஷர்மா :

- Advertisement -

2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரோகித் சர்மா 2 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடி விட்டு 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். தற்போதுவரை 13 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

dhawan1

ஷிகர் தவான் :

- Advertisement -

அனைவரும் இவர் 13 வருடங்களாக விளையாடி வருகிறார் என்ற கேள்வியுடன் இருப்போம். 2008ம் ஆண்டு டெல்லி அணியில் இணைந்த இவர், ஒரு வருடம் அந்த அணிக்காக ஆடினார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் தற்போது மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் ஷிகர் தவான்.

கிறிஸ் கெய்ல் :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான இவர் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமாகி அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளாக 13 வருடங்களாக விளையாடி வருகிறார்.

Advertisement