ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்னரே வெளியேறிய 5 நட்சத்திர வீரர்கள் – விவரம் இதோ

- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடர் தொடங்கும் முன்பே பல அணிகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இந்தத்தொடர் தொடங்கும் முன்னரே வெளியேறி உள்ளனர். அவர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

Raina-1

சுரேஷ் ரெய்னா : (சென்னை சூப்பர் கிங்ஸ்) சென்னையில் நடந்த பயிற்சி முகாமை முடித்த இவர் சி.எஸ்.கே அணியோடு துபாய் சென்றார். ஆனால் அங்கு அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் மற்றும் சொந்த பிரச்சனை காரணமாக நாடு திரும்பினார்.

Harbhajan

ஹர்பஜன்சிங் : (சென்னை சூப்பர் கிங்ஸ்) கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இவர் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்கிறார். 40 வயதாகும் இவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த வருட ஐபிஎல் தொடரை தொடரில் சொந்த காரணங்களால் கலந்து கொள்ள முடியாது என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தி உள்ளார். அதனால் இவர் தொடரில் விளையாட முடியாது.

- Advertisement -

Richardson

கேன் ரிச்சர்ட்ஸன் : (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) பெங்களூர் அணிக்காக விளையாட இருந்த இவர் தனது மனைவியின் பிரசவத்தை காரணம் காட்டி இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். அக்டோபர் முதல் வாரத்தில் தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Woakes

கிறிஸ் வோக்ஸ் : (டெல்லி கேபிட்டல்ஸ்) இவரை டெல்லி அணி ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் தற்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடரிலிருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

லசித் மலிங்கா : (மும்பை இந்தியன்ஸ்) கடந்த வருட இறுதிப் போட்டியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற காரணமாக இருந்தவர் மலிங்கா மேலும் தொடர்ந்து மும்பை அணிக்கு பல ஆண்டுகளாக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் இவரும் தனது குடும்பத்தின் பாதுகாப்பு காரணமாக இத்தொடரை ரத்து செய்து வீட்டிலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement