குஜராத் மாநிலத்தை கொண்டு உருவாக இருக்கும் புதிய ஐ.பி.எல் அணிக்கு கேப்டனாக வாய்ப்புள்ள 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ipl trophy
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த 13வது ஐபிஎல் தொடர் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த வருட ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றது. அடுத்த வருடம் மற்றொரு புதிய அணி பங்கேற்கும் என்று தெரிகிறது. ஒன்பதாவது அணி குஜராத் மாநிலத்தை மையமாகக்கொண்டு ஒரு அணி உருவாக்கப்பட இருக்கிறது. தற்போது இந்த அணியை வழிநடத்த வாய்ப்புள்ள 5 வீரர்கள் பற்றி பார்ப்போம். (ஆனால் இந்த அணி குறித்த எந்தவொரு அறிவிப்பினையும் பி.சி.சி.ஐ இதுவரை வெளியிடவில்லை). இருப்பினும் நிச்சயம் வருங்காலத்தில் இந்த அணி நிச்சயம் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

மணீஷ் பாண்டே :

- Advertisement -

இவர் தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். பல வருடங்களாக சீனியர் வீரராக இருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக அவ்வப்போது விளையாடி வருகிறார். அடுத்த வருடம் கண்டிப்பாக சன் ரைசர்ஸ் அணியிலிருந்து இவர் வெளியேற்றப் பட வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் இவர் கேப்டனாகவும் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் :

- Advertisement -

சர்வதேச வீரரான இவர் ஏற்கனவே பஞ்சாப் அணியை வழிநடத்தி இருக்கிறார். சென்னை அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர் அடுத்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணியால் கழட்டிவிடபடலாம். அப்போது குஜராத் இவரை எடுத்து கேப்டனாக மாற்றலாம்.

Rahane

அஜின்கியா ரஹானே :

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக இருந்த இவர் டெல்லி அணியில் களம் இறக்கப்பட்டு பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இந்த வருடம் வெளியில் அமர்ந்திருந்தார். இவரும் அடுத்த வருடம் ஏல்த்திற்கு வந்து புதிய அணியில் கேப்டனாக விளையாட வாய்ப்பு இருக்கிறது.

Williamson

கேன் வில்லியம்சன் :

- Advertisement -

ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கும் இவர் ஒரு மிகச் சிறந்த கேப்டன் ஆனால் இவர் தற்போது வரை ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. இதனால் புதிய அணிக்கு கேப்டனாக மாற வாய்ப்புள்ளது.

Raina

சுரேஷ் ரெய்னா :

சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து இந்த வருடம் வேறு வழி இல்லாமல் ஐபிஎல் தொடரில் ஆடாமல் இருந்துவிட்டார். அடுத்த வருடம் சென்னை அணியால் இவர் வாங்கப்படுவது சந்தேகம்தான் எப்படிப் பார்த்தாலும் அடுத்த வருடம் அவர் வாங்கப்படவில்லை என்றால் கண்டிப்பாக இவரை குஜராத் அணி எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஏனெனில் ஏற்கனவே குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்துதிருக்கிறார்.

Advertisement