நல்ல டேலன்ட் இருந்தும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Parthiv

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துவிட்டது. பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று விட்டது. இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகவும் வித்தியாசமாக இருந்தது பல இளம் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதன் காரணமாக திறமை இருந்தும் பல வீரர்கள் ஒரு போட்டியில் கூட ஆடாமல் உட்கார வைக்கப்பட்டனர். அப்படிப்பட்ட 5 வீரர்களை பார்ப்போம்.

chris

கிரிஸ் லின் :

இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடிய அதிரடி தொடக்க வீரர் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் விலைக்கு வாங்கப்பட்ட அவர் அந்த அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடியதால் இவருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

Parthiv

பார்த்திவ் படேல் :

- Advertisement -

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து நன்றாக விளையாடி வரும் இவர் இந்த வருடம் பெங்களூர் அணிக்காக விளையாடினார். பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியதால் இவருக்கும் இந்த வருடம் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

negi

பவன் நெகி :

தனது முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பவன் நெகி தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது இடத்தை வாசிங்டன் சுந்தர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். இதன் காரணமாக இவரது கடைசி வரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

Mitchell

மிட்செல் மெக்லெங்கன் :

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர். இவர் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக பந்து வீசி வந்தார். டிரென்ட் போல்ட். இவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டதால் மறுக்கப்பட்டதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

vohra

மணன் வோஹ்ரா :

பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிக்காக கடந்த சில வருடங்களாக அதிரடியாக விளையாடி அவர் இவர் இந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 20 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது கடைசிவரை இவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.