2021 ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்புள்ள 5 இளம்வீரர்கள் – லிஸ்ட் இதோ

Young
- Advertisement -

உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களது அணிக்காக திறமையான புதிய இளம் வீரர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் மற்ற அனைத்து அணிகளை விடவும் முன்னனியில் இருப்பது நமது இந்திய கிரிக்கெட் அணிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆண்டுதோறும் பல திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் தங்களது திறமையை நிரூபித்த பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் ஒன்றாகும். அதுபோல் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் பல திறமையான இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருங்கால இந்திய அணியில் இடம்பிடிக்க தயாராக உள்ளனர். யார் அந்த வீரர்கள்? விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவேஷ் கான்:

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்த 23 வயதான வலது கை வேகப் பந்து வீச்சளரான இவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது மட்டுமில்லாமல் இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். டெல்லி அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்பதெல்லாம் விக்கெட் எடுத்து கொடுத்த அவேஷ் கான், இத்தொடர் முழுவதும் அந்த அணிக்கு சீரான பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார். எனவே தான் ஆண்ட்ரிச் நோர்க்கியா போன்ற உலகத் தரம் வாய்ந்த பவுலரைக் கூட வெளியில் அமர வைத்துவிட்டு அவேஷ்கானிற்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது டெல்லி அணி. இத்தொடரில் விக்கெட் வேட்டை நடத்தியது மட்டுமல்லாமல் 7.70 என்ற மிகக் குறைந்த எகானமி ரேட்டிலும் பந்து வீசி அசத்தியிருக்கிறார் அவேஷ் கான்.

வருண் சக்கரவர்த்தி:

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அற்புதமாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்திக்கு, அந்த ஆண்டே நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அத் தொடருக்கு முன்பாக காயமடைந்த அவர், அத்தொடரிலிருந்தே வெளியேறினார். இதற்கிடையில் மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலர்கள் சொதப்பிய போதும், தனது அற்புதமான ஸ்பின் பவுலிங்கினால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். எனவே அவருக்கு வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி பிஷ்னோய்:

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூபாய் 2 கோடி கொடுத்து பஞ்சாப் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார், 20 வயதே ஆன ரவி பிஷ்னோய். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர், இந்த ஐபிஎல் தொடரிலும் தனது சிக்கனமான பந்து வீச்சினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே சஹால், குல்தீப் என இரண்டு ஸ்பின்னர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக இந்த இளம் வீரரை களமிறக்க இந்திய அணி ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

padikkal 1

தேவ்தத் படிக்கல்:

- Advertisement -

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இடது கை துவக்க ஆட்டக்காரரான இவர், சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரின்போதே தனது திறமையை நிரூபித்துவிட்டார். அதே போல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அறபுதமான ஒரு சதத்தை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மாவுடன் தேவ்தத் படிக்கல்லை ஓபனிங்கில் விளையாட வைத்தால் , வலது மற்றும் இடது கை ஆட்டக்காரர்கள் என்ற அற்புதமான காம்பினேஷன் கிடைக்கும் என்பதால் தேத்வத் படிக்கல்லின் அறிமுகமும் விரைவில் இந்திய அணியில் நிகழும்.

sakariya 2

சேட்டன் சக்காரியா:

இந்திய அணிக்கு திறமையான இடது கை வேகப் பந்து வீச்சாளர்கள் கிடைப்பதில் எப்போதுமே அதிர்ஷ்டம் இருந்ததில்லை. ஜாகீர் கானுக்குப் பிறகு இந்திய அணிக்கு கிடைத்த திறமையான வேகப் பந்து வீச்சாளர் என்றால் அது நடராஜன் மட்டுமே. ஆனால் இப்போது, அவரும் காயத்தினால் இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்ட இடது கை வேகப் பந்து வீச்சாளரானா சேட்டன் சக்காரியாவை இந்திய அணிக்கு தேர்வு செய்து, இடது கை வேகப் பந்து வீச்சாளரின் பற்றாக் குறையை பிசிசிஐ போக்கிக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement