சர்வதேச டி20 கேரியரை சிக்ஸரோடு ஆரம்பித்த 5 அட்டகாசமான வீரர்கள் – சுவாரஸ்ய தகவல் இதோ

Polly

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் தங்களது தேசிய அணிக்காக விளையாடும் போது மிகப் பெரிய கனவாக இருக்கும்.அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களது முதல் போட்டியில் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்று மிகவும் நிதானித்து விளையாட வேண்டும் என்கிற எண்ணம் எல்லோர் மத்தியிலும் இருக்கும். ஆனால் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் தங்களது முதல் போட்டியில் எந்தவித பயமும் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடியாக சிக்சர் அடித்து அசத்தி இருக்கின்றனர். அப்படிப்பட்ட சில வீரர்கள் பற்றி பார்ப்போம்.

Sky

சூர்யகுமார் யாதவ் :

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தனது முதல் போட்டியில் விளையாடினார் ஆனால் அவருக்கு அப்போது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியிலேயே களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆட வந்தார்.
அவர் பேட்டிங் ஆட வந்த வேளையில் ஆர்ச்சர் பந்துவீசி கொண்டிருந்தார். அப்பொழுது வேகமாக வீசிய ஆர்ச்சரின் பந்தை கொஞ்சம் கூட பயம் இல்லாமல் புல் ஷாட் அடித்து சிக்சராக பவுண்டரிக்கு மேல் பறக்கவிட்டார்.அதுமட்டுமல்லாமல் அந்த போட்டியில் அரைசதம் அடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.

Pollard

கீரன் பொல்லார்டு :

- Advertisement -

பொல்லார்டு என்று கூறினாலே அவரது சிக்சர் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அப்படி நியூஸிலாந்துக்கு எதிராக 2008ஆம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியில் விளையாடிய பொல்லார்ட் தான் மேற்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார். அந்தப் போட்டி ஒரு கட்டத்தில் சமனில் வந்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர் நடைபெற்ற போட்டியும் அதுவே. கடைசியில் சூப்பர் ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

Tanvir

சோஹைல் தன்வீர் :

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் தன்வீர் பேட்டிங் ஆட வந்தார். பாகிஸ்தான் இந்தியா அடித்த இலக்கை சேஸ் செய்து கொண்டிருந்த வேளையில் 18-வது ஓவரில் தன்வீர் பேட்டிங் ஆட வந்தார். ஸ்ரீசாந்த் வீசிய பந்தை மேற்கொண்ட தன்வீர் சிக்சர் அடித்து அசத்தினார்.இருந்த போதிலும் இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக நடந்த உலக கோப்பை டி20 தொடரை கைப்பற்றியது.

best

டினோ பெஸ்ட் :

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்தவரான டினோ பெபஸ்ட் ஆரம்ப காலகட்டத்தில் மிக வேகமாக பந்துகளை வீசி வருவார். பிற்காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது கேரியர் மிக சீக்கிரமாகவே முடிவுக்கு வந்தது.

இருந்தபோதிலும் அவர் சில நல்ல நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மறக்கமுடியாத நினைவு தான் அவரது சிக்ஸர். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு டி20 போட்டியில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரு கட்டத்தில் பெஸ்ட் பேட்டிங் ஆட வந்தார். அப்போது அவர் சையது அஜ்மல் பந்தை மேற்கொண்டார். சர்வதேச போட்டியில் தனது முதல் பந்தை மேற்கொண்ட டினோ பெஸ்ட் சிக்சர் அடித்து அசத்தினார்.இருந்த போதிலும் இறுதியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது.

Taylor

ஜெரோம் டெய்லர் :

தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 போட்டியில் 2008 ஆம் ஆண்டு ஜெரோம் டெய்லருக்கு பேட்டிங் ஆட முதன்முதலாக வாய்ப்பு வந்தது.அப்போது இருந்த தென்ஆப்பிரிக்க அணியின் பவுலர்கள் மிக வேகமாக பந்து வீச கூடிய பவுலர்கள் ஆவார்கள். ஷான் பொல்லாக், நிடினி, அல்பி மோர்க்கல் மற்றும் மோர்னி மோர்க்கல் இருந்த தென் ஆப்பிரிக்க அணி அது. நிடினி வீசிய பந்தை தனது முதல் பந்தாக மேற்கொண்ட ஜெரோம் டெய்லர் வேகமாக வந்த பந்தை மிட்விக்கெட் பக்கம் தூக்கி சிக்ஸர் அடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.இருந்த போதிலும் அந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.