சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேப்டன்களின் கீழ் விளையாடிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Captain
- Advertisement -

146 வருட கிரிக்கெட் வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கிரிக்கெட் கேப்டன்கள் உருவாக்கிவிட்டனர். இதில் ஒரு சிலர் வீரர்களாகவும் கேப்டனாகவும் இருந்திருப்பார்கள். ஒரு சிலர் அதிக கேப்டன் இறுதிவரை கேப்டன்களில் விளையாடி இருப்பார்கள். ஒரு சிலர் அதிக வருடங்கள் கேப்டனாக இருந்திருப்பார்கள். இந்நிலையில் அதிக கேப்டன் தலைமையில் விளையாடிய வீரர்களில் பட்டியலைப் பார்ப்போம்.

- Advertisement -

சோயப் மாலிக் – 15 கேப்டன்கள் :

பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் தற்போது வரை 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டு அறிமுகமானவர். சோயப் மாலிக் விளையாடிய கேப்டன் களின் பெயர்கள் :

அப்துல் ரசாக் (1 ஒருநாள்), அசார் அலி (25 ஒருநாள்), பாபர் அசாம் (2 டி 20), இன்சமாம்-உல்-ஹக் (13 டெஸ்ட், 84 ஒருநாள், 1 டி 20), மிஸ்பா-உல்-ஹக் (3 டெஸ்ட், 24 ஒருநாள், 8 டி 20 போட்டிகள்), முகமது ஹபீஸ் (2 ஒருநாள், 20 டி 20), முகமது யூசுப் (5 டெஸ்ட், 6 ஒருநாள்), மொயின் கான் (5 ஒருநாள்), ரஷீத் லத்தீப் (1 டெஸ்ட், 12 ஒருநாள்), சல்மான் பட் (3 டெஸ்ட்), சர்பராஸ் அகமது ( 39 ஒருநாள், 29 டி 20), ஷாஹித் அப்ரிடி (4 ஒருநாள், 25 டி 20), வக்கார் யூனிஸ் (2 டெஸ்ட், 21 ஒருநாள்), வாசிம் அக்ரம் (5 ஒருநாள்), யூனிஸ் கான் (5 டெஸ்ட், 18 ஒருநாள், 8 டி 20).

- Advertisement -

rassaq

அப்துல் ரசாக் – 15 கேப்டன்கள் :

இவர் பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ஆவார் 18 வருடங்கள் பாகிஸ்தானுக்காக ஆடியவர் 343 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஆசிய லெவனுக்காக ஆடியபோது சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழும் விளையாடி இருக்கிறார். இவர் 15 கேப்டன்களில் விளையாடியதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அப்துல் ரசாக் விளையாடிய கேப்டன்களின் பெயர்கள் :

- Advertisement -

அமர் சோஹைல் (3 ஒருநாள்), சவுரவ் கங்குலி (1 ஒருநாள்), இன்சமாம்-உல்-ஹக் (19 டெஸ்ட், 85 ஒருநாள், 1 டி 20), மிஸ்பா-உல்-ஹக் (3 ஒருநாள்), முகமது ஹபீஸ் (6 டி 20), முகமது யூசுப் ( 1 டெஸ்ட், 2 ஒருநாள்), மொயின் கான் (9 டெஸ்ட், 31 ஒருநாள்), ரமீஸ் ராஜா (2 ஒருநாள்), ரஷீத் லத்தீப் (17 ஒருநாள்), சயீத் அன்வர் (2 டெஸ்ட், 3 ஒருநாள்), ஷாஹித் அப்ரிடி (25 ஒருநாள், 18 டி 20) .

Afridi 3

சாகித் அப்ரிடி – 15 கேப்டன்கள் :

- Advertisement -

இவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஆல்ரவுண்டர் ஆன இவர் கிட்டத்தட்ட 400 போட்டிகளுக்கு மேல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். மேலும், ஆசிய லவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்காக விளையாடிய போது வெளிநாட்டு கேப்டன்களில் தலைமையின் கீழும் விளையாடியிருக்கிறார். சாகித் அப்ரிடி விளையாடிய கேப்டன்கள் பட்டியல்

அமர் சோஹைல் (1 டெஸ்ட், 11 ஒருநாள்), அப்துல் ரசாக் (1 ஒருநாள்), இன்சாம்-உல்-ஹக் (9 டெஸ்ட், 55 ஒருநாள், 1 டி 20), மிஸ்பா-உல்-ஹக் (70 ஒருநாள், 6 டி 20), முகமது ஹபீஸ் (26) டி 20 போட்டிகள்), முகமது யூசுப் (1 டெஸ்ட், 5 ஒருநாள்), மொயின் கான் (4 டெஸ்ட், 22 ஒருநாள்), ஷான் பொல்லாக் (2 ஒருநாள்), ரமீஸ் ராஜா (14 ஒருநாள்), ரஷீத் லத்தீப் (9 ஒருநாள்), சயீத் அன்வர் (1 டெஸ்ட், 7 ஒருநாள்), சோயிப் மாலிக் (32 ஒருநாள், 14 டி 20), வக்கார் யூனிஸ் (3 டெஸ்ட், 53 ஒருநாள்), வாசிம் அக்ரம் (5 டெஸ்ட், 58 ஒருநாள்), யூனிஸ் கான் (2 டெஸ்ட், 21 ஒருநாள், 8 டி 20).

gayle

கிறிஸ் கெயில் – 16 கேப்டன்கள் :

தற்போது நாம் இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேலை வரை கிறிஸ் கெய்ல் 462 சர்வதேச போட்டிகளில் ஆடி 16 கேப்டன்களின் தலைமையை ஏற்றுள்ளார். இவரும் 90 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் ஆசிய லெவன் உலகளவில் போன்ற அணிகளுக்காக ஆடும்போது வெளிநாட்டு கேப்டனை கேப்டன் தலைமையிலும் விளையாடியிருக்கிறார். .கிறிஸ் கெயில் விளையாடிய கேப்டன்களில் பட்டியல் :

ஜிம்மி ஆடம்ஸ் (4 டெஸ்ட், 13 ஒருநாள்), கார்லோஸ் பிராத்வைட் (6 டி 20), டுவைன் பிராவோ (14 ஒருநாள்), ஷிவ்நாரைன் சந்தர்பால் (10 டெஸ்ட், 13 ஒருநாள், 1 டி 20), டேரன் கங்கா (2 டெஸ்ட்), ஜேசன் ஹோல்டர் (42 ஒருநாள், 2 டி 20 போட்டிகள்), கார்ல் ஹூப்பர் (22 டெஸ்ட், 44 ஒருநாள்), ரிட்லி ஜேக்கப்ஸ் (2 டெஸ்ட், 4 ஒருநாள்), பிரையன் லாரா (26 டெஸ்ட், 87 ஒருநாள்), ஜேசன் முகமது (1 ஒருநாள்), கீரோன் பொல்லார்ட் (2 ஒருநாள்), ஷான் பொல்லாக் (2 ஒருநாள்), ரிக்கி பாண்டிங் (1 ஒருநாள்), தேனேஷ் ராம்தீன் (4 டெஸ்ட்), டேரன் சமி (11 டெஸ்ட், 22 ஒருநாள், 30 டி 20), ராம்நரேஷ் சர்வன் (2 டெஸ்ட், 3 ஒருநாள், 2 டி 20).

Samuels

மர்லோன் சாமுவேல்ஸ் – 17 கேப்டன்கள் :

தற்போதுவரை கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேப்டன் தலைமையின்கீழ் விளையாடிய ஒரே ஒரு சர்வதேச வீரர் இவர்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆக 19 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்த வந்தார். இவர் விளையாடிய கேப்டன்களில் பட்டியல் :

ஜிம்மி ஆடம்ஸ் (3 டெஸ்ட், 10 ஒருநாள்), கார்லோஸ் பிராத்வைட் (18 டி 20 ஐ), டுவைன் பிராவோ (1 டெஸ்ட், 24 ஒருநாள், 2 டி 20 ஐ), ஷெர்வின் காம்ப்பெல் (1 ஒருநாள்), ஷிவ்நாரைன் சந்தர்பால் (2 டெஸ்ட்), டேரன் கங்கா (1 டெஸ்ட்) , கிறிஸ் கெய்ல் (4 டெஸ்ட், 11 ஒருநாள், 2 டி 20), ஜேசன் ஹோல்டர் (12 டெஸ்ட், 40 ஒருநாள்), கார்ல் ஹூப்பர் (10 டெஸ்ட், 25 ஒருநாள்), ரிட்லி ஜேக்கப்ஸ் (2 டெஸ்ட், 4 ஒருநாள்), பிரையன் லாரா (6 டெஸ்ட், 50 ஒருநாள்), ஜேசன் முகமது (1 ஒருநாள், 3 டி 20), கீரோன் பொல்லார்ட் (2 ஒருநாள்), ரோவ்மன் பவல் (3 ஒருநாள்), தேனேஷ் ராம்தின் (8 டெஸ்ட், 1 ஒருநாள்), டேரன் சமி (22 டெஸ்ட், 34 ஒருநாள், 40 டி 20 ஐ) , ராம்நரேஷ் சர்வன் (2 டி 20 ஐ)

Advertisement