சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13வது ஐபிஎல் தொடரில் படுமோசமாக விளையாடி பிளே-ஆப் சுற்றுக்கு கூட சொல்லாமல் வெளியேறிவிட்டது. இது இத்தனை வருடமாக அந்த அணி காப்பாற்றி வைத்திருக்கிற மாண்பை சிதைத்துவிட்டது. இதற்கு அந்த அணியில் பல வீரர்கள் காரணமாக இருந்தனர். அணியிலுள்ள பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடவில்லை. அடுத்த வருடம் புதிய அணியை கட்டமைக்க போகிறோம் என்று தல தோனி கூறியிருந்தார். அப்படி புதிய அணியை கட்டமைக்கும் போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவே முடியாத வீரர்கள் பற்றி பார்ப்போம்.
கேதர் ஜாதவ் :
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அரைசதம் அடித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. பெரிதாக எந்த ஆட்டமும் ஆடவில்லை. 2020 ஆம் ஆண்டு இவரது ஆட்டம் உச்சக் கட்ட மோச நிலைக்குச் சென்றுவிட்டது. இவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடுவது கடினம்.
ஹர்பஜன்சிங் :
13வது ஐபிஎல் தொடரின் முன்பாக திடீரென தொடரிலிருந்து காரணம் சொல்லாமல் வெளியேறிவிட்டார். துண்டு துக்கடா காரணத்தை கூறிக்கொண்டிருந்தார். மேலும், சமூக வளைதளத்தில் சென்னை அணியை பற்றி விமர்சனம் வைத்துக் கொண்டிருந்தார். இவருக்கும் வயதாகிவிட்டது. இவரால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக எதனையும் சாதிக்க போவதில்லை.
பியூஸ் சாவ்லா :
சென்னை அணிக்காக பல கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டவர். அதற்கான நியாயத்தை சரி செய்யவில்லை. தொடர்ந்து போட்டிகளில் ரன்கள் கொடுத்து கொண்டிருந்தார். இவருக்கும் கண்டிப்பாக இதை சென்னை அணியில் இடம் இருக்காது.
முரளி விஜய் :
இவர் சென்னை அணியில் மட்டுமல்ல இனிமேல் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று கூறலாம். நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர் தனது மொத்த ஆட்டத்தையும் இழந்து விட்டார். இனி அவரால் மீண்டும் எந்த ஒரு அணியிலும் இடம் பெற முடியாது என்பதே உண்மை.
இம்ரான் தாஹிர் :
வயது மூப்பின் காரணமாக இவர் சென்னையில் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நீக்கப்பட்டு விட்டால் மீண்டும் இவருக்கான இடம் கிடைப்பது கடினம்.