99 ரன்கள் எடுத்து 1 ரன்னில் ஐ.பி.எல் சதத்தை தவறவிட்ட 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

IPL
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். ஆனாலும் பந்துவீச்சாளர்கள் அவ்வப்போது தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இஷான் கிசான் 99 ரன்களில் ஆட்டமிழந்து தனது சதத்தை தவறவிட்டார்.

- Advertisement -

அப்படி ஐ.பி.எல் போட்டிகளில் 99 ரன்களை அடித்து ஒரே ஒரு ரன்னில் சதமடிக்கும் அற்புதமான வாய்ப்பை சில வீரர்கள் நூலிழையில் இழந்துள்ளனர். அப்படி இத்தனை வருடங்களில் ஐ.பி.எல் போட்டிகளில் 99 ரன்கள் அடித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட 5 வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தற்போதைய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தான். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் 76 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் சில பவுண்டரிகள் அடித்த கோலி சரியாக 99 ரன்களில் ஆட்டமிழந்து தனது சதத்தை தவற விட்டார்.

அதனை தொடர்ந்து தற்போது டெல்லி அணிக்காக ஆடிக்கொண்டிருக்கும் இளம் துவக்க வீரரான பிரித்வி ஷா. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 186 ரன்கள் என்கிற இலக்கினை எதிர்த்து ப்ரித்வி ஷா அருமையாக விளையாடினார். அப்போது அதிர்ஷ்டவசமின்றி அவரும் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Shaw-1

இதேபோல் லோக்கி பெர்குசன் எனும் வீரர் 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் வரலாற்றின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரும் 99 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தும் 1 ரன்னில் சதத்தை தவறவிட்டுள்ளார்கள்.

Advertisement