ஐ.பி.எல் தொடரின் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து கழட்டிவிடப்பட்ட 5 வெளிநாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ponting

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு, உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதேசமயம் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சில சர்ச்சைகள் எழுந்து, அது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே மிகுந்த அதிர்வலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடரிலும், ஒரு மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இத்தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த டேவிட் வார்னர், அந்த அணியின் நிர்வாகத்தை வெளிப்படையாக சாடியதையடுத்து, அவரை அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த போட்டியில் அணியிலிருந்தே அவரை நீக்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம்.

இதனால் அந்த அணி நிர்வாகம் பல்வேறு விதமான விமர்ச்சனங்களை எதிர்கொண்டது. இப்படி தொடரின் பாதியில் ஒரு வெளிநாட்டு கேப்டனை, அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்குவது ஐபிஎல் தொடருக்கு ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இதற்கு முன்பும் சில வெளிநாட்டு கேப்டன்கள், தொடரின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு அணியிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். யார் அந்த வெளிநாட்டு கேப்டன்கள்? அதைப்பற்றி கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

pietersen

- Advertisement -

கெவின் பீட்டர்சன் – 2009:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 2009ஆம் ஆண்டு 9.8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட கெவின் பீட்டர்சனுக்கு, அந்த அணியை வழிநடத்தும் பொறுப்பும் அந்த ஆண்டு வழங்கப்பட்டது. அந்த தொடரில் முதல் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 93 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார். அப்போது இங்கிலாந்து அணி வெளிநாட்டு தொடரில் பங்கேற்க இருந்ததால், பெங்களூர் அணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் பீட்டர்சன். அவருக்குப் பின் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பு இந்தியாவின் ஸ்பின் பௌலரான அனில் கும்ப்ளேவிற்கு சென்றது. அந்த தொடரில் மீதமிருந்த போட்டிகளை அற்புதமாக ஆடிய பெங்களூர் அணி, அந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

sanga

- Advertisement -

குமார் சங்ககரா – 2012:

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய குமார் சங்ககராவை, 2012ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது ஐதராபாத் அணி. அந்த சீசனில் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் 12 போட்டிகளில் விளையாடி 200 ரன்களை மட்டுமே எடுத்ததால், தன்னைத்தானே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். அவருக்கு பிறகு கேப்டன் பொறுப்பு ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் வொயிட்டிற்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டு அந்த அணி 16 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது.

vettori

டேனியல் வெட்டோரி – 2012:

2011 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் போது பெங்களூர் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய டேனியல் வெட்டோரி, அந்த தொடரில் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால் அவரால் 2012ஆம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியவில்லை. எனவே தனது இடத்தை இன்னொரு ஸ்பின்னரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கிவிட்டு வெளியில் அமரும் முடிவை எடுத்தார். அவருக்குப் பின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு சென்றது. அன்றிலிருந்து இன்று வரை பெங்களூர் அணியின் கேப்டனாக திகழ்கிறார் விராட் கோலி.

ponting

ரிக்கி பாண்டிங் – 2013:

2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஒரு நாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்காக வென்று தந்த ரிக்கி பாண்டிங், 2013 ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக சரியாக செயல்படாமல் போனதால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அந்த ஆண்டே, அணியை அற்புதமாக வழிநடத்தி ஐபிஎல் கோப்பையையும் பெற்றுத் தந்தார்.

miller

டேவிட் மில்லர் – 2016:

இன்று வரை பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் டேவிட் மில்லர், 2016ஆம் ஆண்டு அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 6 போட்டிகளில் 5 தோல்விகளை பெற்றுத் தந்ததால், உடனடியாக பஞ்சாப் அணியை வழிநடத்தும் பொறுப்பு தமிழக வீரரான முரளி விஜய்க்கு வழங்கப்பட்டது. கேப்டனாக சரியாக செயல்படாத போதும் அணியில் ஒரு வீரராக சிறப்பாக செயல்பட்ட டேவிட் மில்லர் இன்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

Advertisement