ஐ.பி.எல் நிறுத்தப்பட்டதால் மகிழ்ச்சியில் இருக்கும் 5 பார்ம் அவுட்டான வீரர்கள் – லிஸ்ட் இதோ

Pooran
- Advertisement -

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 14வது சீசன், சில தினங்களுக்கு முன்பு வீரர்களிடையே கொரானா பரவியதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பல திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை கண்டெடுத்து கொடுப்பதில் ஐபிஎல் தொடருக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதேபோல் திறமை வாய்ந்த பல இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரில் தங்களது திறைமையை நிரூபித்து இந்திய அணியில் இடம் பெறுதையே கனவாக கொண்டிருக்கின்றனர். இந்த ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தபோது, துர்திஷ்ட்ட வசமாக இந்த ஐபிஎல் தொடர் பாதியில் நின்றதால், அந்த இளம் வீரர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் இதற்கு முன்பு தங்களது திறமையை நிரூபித்திருந்த போதும், இத்தொடரில் சிறப்பாக விளையாடாமல் தவித்துக் கொண்டிருந்த வீரர்களுக்கு, இப்படி ஐபிஎல் பாதியிலேயே நின்றுபோனது ஒரு விதத்தில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் மீண்டும் செப்டம்பர் மாதம் ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்னர் இவர்க்ள் பார்ம்முக்கு வர வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடர் நின்றதால் தங்களது சொதப்பலான ஆட்டத்தில் இருந்து தப்பித்த வீரர்களை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

- Advertisement -

warner 1

டேவிட் வார்னர்:

ஐபிஎல் தொடர்களில் இதுவரை மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருக்கும் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு ஒரு முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி தந்திருக்கிறார். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக சொதப்பியதோடு மட்டுமல்லாமல், அணியை வழிநடத்தும் கேப்டனாகவும் சரியாக செயல்படாமல் போயிருக்கிறார். இந்த தொடரில் 6 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட டேவிட் வார்னர், அந்த அணிக்கு 5 தோல்விகளை பெற்றுத் தந்திருக்கிறார். மேலும் ஐதராபாத் அணி நிர்வாகத்துடனான பிரச்சனையால் அணியிலிருந்தும் ஓரம் கட்டப்பட்ட அவர், இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 110.28 என்ற ஸ்ரைக் ரேட்டுடன் 193 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஷர்துல் தாக்கூர்:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலும், இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் இந்தியாவிற்காக சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாக்கூர், அதே சிறப்பான பங்களிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இந்த தொடரில் வழங்கத் தவறிவிட்டார். அவருடைய லைன் அன்ட் லெந்தை மொத்தமாக மறந்துவிட்டதால், இத்தொடரில் இரு போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருக்கிறார். இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள தாக்கூர், 10.33 எகானமி ரேட்டில் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தொடரில் அதிக பவுண்டரிகள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

Morgan

இயான் மோர்கன்:

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை வழிநடத்திய இயான் மோர்கன், இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் சொதப்பி பல்வேறு விமர்ச்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். கடந்த இந்தியா தொடரின் போதே சிறப்பாக செயல்படாத மோர்கன் இந்த தொடரிலாவது சிறப்பாக செயல் படுவார் என்று எதிர்பார்த்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அடித்த மொத்த ரன்கள் வெறும் 92 மட்டுமே.

- Advertisement -

Rabada

காகிஸோ ரபாடா:

2020 ஐபிஎல் சீசனில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றிய டெல்லி அணியின் வேகப் பந்து வீச்சளரான இவர், இந்த தொடரில் 7 போட்டிகளை அந்த அணிக்காக விளையாடி 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவரிடம் முன்பிருந்த வேரியேஷன்கள் எதுவும் இந்த தொடரில் இல்லாமல் போனதால் அனைத்து பேட்ஸ்மேன்களுமே அவருடைய பந்தை எளிதாக எதிர்கொண்டனர். பலம் வாய்ந்த டெல்லி அணியில் இந்த தொடரில் இருந்த ஒரே குறையாக பார்க்கப்பட்டார் காகிஸோ ரபாடா.

நிகோலஸ் பூரான்:

ஒரு பேட்ஸ்மேன் எப்படியெல்லாம் டக் அவுட் ஆகலாம் என்று அனைவருக்கும் இத்தொடரில் பாடம் எடுத்துள்ளார் பஞ்சாப் அணியின் வீரரான நிகோலஸ் பூரான். கோல்டன் டக், சில்வர் டக், டைமண்ட் டக், ப்ரோன்ஷ் டக் என அனைத்து விதமான டக் அவுட்டையும் ஆகியிருக்கும் இவர், இத்தொடரில் பஞ்சாப் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 28 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அவருடைய பேட்டிங் சராசரா வெறும் 4.43 மட்டுமே.

Advertisement