தோனிக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்று ஓய்வை அறிவிக்காத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது. பேட்ஸ்மேனாக, ஒரு கீப்பராக மேலும் ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு பல்வேறு வகையில் சாதனைகளையும், புகழையும், வெற்றி மகுடங்களையும் இதுவரை மகேந்திர சிங் தோனி தந்துள்ளார். தோனிக்கு முன் தோனிக்கு பின் என்று கூறுமளவுக்கு அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைத்துள்ளார். இருந்தபோதிலும் மகேந்திர சிங் தோனியின் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.இந்நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு முன்பே விளையாட ஆரம்பித்து இன்னும் ஓய்வு பெறாத கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பார்ப்போம்

karthik

- Advertisement -

தினேஷ் கார்த்திக் :

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் ஆட ஆரம்பித்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் ஆட ஆரம்பித்தார். மகேந்திர சிங் தோனியின் ஆட்டம் இந்திய அணியால் கவரப்பட்டு அதன் பின்னர் மகேந்திர சிங் தோனியையே இந்திய அணி ஆட வைத்தது.இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் இதுவரையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முடிந்தவரை நன்றாக ஆடி வந்துள்ளார். இந்நிலையில் தோனி ஓய்வு பெற்று விட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் இன்னும் ஓய்வு பெறவில்லை. ஓய்வு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் தனது மனதில் 2021 உலக கோப்பை டி20 தொடர் இன்னும் இருக்கிறது என்றும் அதில் கண்டிப்பாக நான் ஆடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

chris-gayle

கிறிஸ் கெயில் :

- Advertisement -

1999ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் கிறிஸ் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். டி20 போட்டிகளை பொறுத்தவரையில் கிறிஸ் கெயில் இல்லாத ஒரு போட்டியை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளார். உலக அளவில் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு வீரராக திகழ்ந்து வரும் கிறிஸ் கெயில் இன்னும் 5 வருடங்கள் விளையாடப் போவதாக சமீபத்தில் கூறியிருக்கிறார். கிண்டலாக அவர் கூறினாலும் இந்த வயதிலும் மிக அதிரடியாக ஆடி வருகையில் எதிரணிக்கு இன்னும் சவாலான வீரராகவே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் மிஸ்ரா :

- Advertisement -

அமித் மிஷ்ரா 2003ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.மிகச்சிறந்த ஸ்பின் பவுலர் ஆன அமித் மிஸ்ரா பல்வேறு காரணங்களால் மற்றும் பிரச்சனைகளால் தொடர்ந்து நிலையாக விளையாட முடியாமல் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இன்னும் ஓய்வு அறிக்கையை வெளியிட அமித் மிஷ்ரா இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பின்பு தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

anderson

ஜேம்ஸ் ஆண்டர்சன் :

- Advertisement -

மகேந்திர சிங் தோனி விளையாடுவதற்கு முன்பு 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் விளையாடிக் கொண்டு வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் பொருத்தவரையில் உலகின் ஜாம்பவான் வீரராக விளங்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்றும் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்யும் அளவிற்கு பந்து வீசி வருகிறார்.குறிப்பாக தற்போது நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை சற்று நிதானித்து ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

harbhajansingh

ஹர்பஜன் சிங் :

1998ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்த ஹர்பஜன்சிங் இன்று வரை ஓய்வு பெறாமல் இருக்கிறார். மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் அப்போது இருந்தார்.இருப்பினும் இன்று வரை தனது ஓய்வு அறிக்கையை வெளியிடாமல் ஹர்பஜன்சிங் மௌனம் காத்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த நபரின் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடி வந்தார்.தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடருக்கு பின்பு தனது முழு ஓய்வு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement