ஐ.பி.எல் தொடரில் விளையாடியுள்ள 5 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மற்ற நாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

Pak-ipl
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து 2009ஆம் ஆண்டு மும்பையில் தாஜ் ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இனிமேல் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது என்று பிசிசிஐ அறிவித்ததை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதியில்லை என்றும் அறிவித்து விட்டது.

அப்போதில் இருந்து தற்போது வரை ஒரு பாகிஸ்தான் வீரர் கூட ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை. இருந்தும் வேறு வழியில் மற்ற நாடுகளின் மூலமாக ஐபிஎல் தொடரில் ஆடிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்

- Advertisement -

இம்ரான் தாஹிர் :

இவர் உண்மையில் பாகிஸ்தானை சேர்ந்தவர். பாகிஸ்தான் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று அங்கு அணிக்காக விளையாடி வருகிறார். தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Shaw

ஒவைஸ் ஷா :

இவர் இங்கிலாந்து அணியின் வலதுகை பேட்ஸ்மேன் ஆவார். பாகிஸ்தானில் பிறந்தாலும் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடினார். அதன் பின்னர் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்

- Advertisement -

அலிகான் :

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தற்போது 2020 ஆம் ஆண்டு விளையாடப் போகிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரி குர்னி காயம் அடைந்து விட்டார். அவருக்காக தற்போது விளையாடப் போகிறார் அலிகான். இவர் பாகிஸ்தானில் பிறந்தவர் இருந்தாலும் அமெரிக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் நன்றாக விளையாடியஅதன்காரணமாக தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடப் போகிறார்.

- Advertisement -

mahmood

அசார் முகமது :

இவர் முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் 2013 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இங்கிலாந்து நாட்டின் குடிமகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

khawaja

உஸ்மான் கவாஜா :

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் இவர். இவர் பாகிஸ்தானில் பிறந்தவர் ஆனால் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அணியில் விளையாடிய இவர் ஐபிஎல் தொடரிலும் தோனி தலைமையிலான புனே அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement