சமீபத்தில் இந்திய ஒருநாள் அணியில் இருந்து காணாமல் போன 5 வீரர்கள் – கிட்டத்தட்ட இவங்களோட கரியர் காலி

Karthik
- Advertisement -

இந்திய அணி ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் மிக பலம் வாய்ந்த அணியாக சமீப வருடங்களாக திகழ்ந்து வருகிறது. எப்பேர்பட்ட அணியாக இருந்தாலும் இந்திய அணியை அவ்வளவு எளிதாக ஜெயித்து விட முடியாது. இந்திய அணி அப்பேர்ப்பட்ட வீரர்களை அணியில் இணைத்து மிகப் பலம் வாய்ந்த அணியாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில வீரர்கள் நன்றாக விளையாடியும் சமீபகாலமாக காணாமல் போயுள்ளனர் அப்படிப்பட்ட 5 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

Shankar

- Advertisement -

விஜய் சங்கர் :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அறிமுகமான விஜய் சங்கர் தனது இரண்டாவது போட்டியிலே 40 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் முக்கியமான விக்கெட்டை(மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் விக்கெட்) எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்தார்.அவரது ஆட்டத்தை கண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை 2019 உலக கோப்பை தொடரில் தேர்வு செய்தது.

அவரிடம் மிக பெரிய அளவு திறமையை கண்டதாகவும் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப் பெரிய அளவில் போவார் என்றும் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் அப்போது கூறினார்.ஆனால் எதிர்பார்த்த விதத்தில் சங்கர் சரியாக ஆடாமல் போக தற்பொழுது அவரை இந்திய அணி கழட்டி விட்டது என்றே கூறலாம். வாய்ப்புக்காக விஜய் சங்கர் வெகு நாட்களாக காத்துக் கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Jadhav

கேதர் ஜாதவ் :

கேதர் ஜாதவ் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.இந்திய அணிக்காக பல போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்தது மட்டுமல்லாமல் தேவைப்படும் நேரங்களில் விக்கெட் எடுத்து கொடுத்து மிகப்பெரிய அளவில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள வீரராவார்.
2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி சேஸ் செய்து கொண்டிருந்த வேளையில் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 120 ரன்கள் அடித்தார். 52 போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவின் பேட்டிங் அவரேஜ் விகிதம் 42 ஆகும். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 101 ஆகும். இன்றுவரை ஒரு வீரர் 40க்கு மேல் ஆவரேஜ் வைத்து மேலும் 100க்கும் மேல் ஸ்டிரைக் ரேட்டும் வைத்து கொண்டுள்ள ஒரே வீரர் கேதர் ஜாதவ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜாதவின் போதாத காலம் சமீபகாலங்களாக வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்.

- Advertisement -

Karthik

தினேஷ் கார்த்திக் :

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக ஒருநாள் போட்டித் தொடர்களில் அவ்வப்போது ஆடிவரும் தினேஷ் கார்த்திக் இதுவரை நிலையாக இந்திய அணிக்காக விளையாடியது இல்லை.இதுவரை 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 9 அரை சதங்களை அடித்துள்ளார். அவரது பேட்டிங் அவரேஜ் முப்பதுக்கு மேல் உள்ளது. இருப்பினும் அவருக்கு நிலையான இடத்தை இந்திய அணி அளிக்கத் தவறியது என்றே கூறலாம்.

- Advertisement -

புதிதாக வீரர்கள் (கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்) களம் இறங்கி வரும் வேளையில் இனியும் தினேஷ் கார்த்திக் அவ்வப்போது கிடைத்து வந்த வாய்ப்பு கூட இனி கிடைக்காது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் :

அஷ்வின் தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி வாரியம் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே பயன்படுத்தி வருகிறது.டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடிய வருகிறாரோ அவ்வளவு சிறப்பாக ஒரு காலத்தில் ஒருநாள் போட்டித் தொடர்கள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் இதுவரை 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.அதில் அவர் 150 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். அவரது எகனோமி 4.92 ஆகும்.மேலும் 61 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் ஆடிய அஸ்வின் 675 ரன்களை குவித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு, அவரது ஸ்ட்ரைக் ரேட் 86.98 ஆகும்.அஸ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி உள்ளார்.அந்தப் போட்டியில் கூட 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

rayudu

அம்பத்தி ராயுடு :

2004 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கேப்டனாக தலைமைதாங்கி அம்பத்தி நாயுடு இதுவரை இந்திய அணிக்காக 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.மொத்தமாக ஆயிரத்து 696 ரன்களை அடித்து இருக்கிறார். அவரது பேட்டிங் அவரேஜ் 47.06ஆகும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 79.05 ஆகும். அதில் அவர் 10 அரை சதங்களும் 3 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அவருக்கு மாற்றாக விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தன்னை இந்திய அணி கைவிட்டுவிட்டது என்று வருத்தத்துடன் வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் என்பது அனைவரும் அறிவர். நல்ல திறமையான பேட்ஸ்மேனை இந்திய அணி பயன்படுத்த தவறியது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

Advertisement