சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தூரம் சிக்ஸ் அடித்த டாப் 5 வீரர்கள் – பிரமிக்கவைக்கும் தகவல் இதோ

- Advertisement -

ஒரு காலத்தில் மைதானங்களில் தூரம் 90 மீட்டர் அளவிற்கு இருந்தது. இதன் காரணமாக பவுண்டரிகள் மட்டும்தான் அடிக்கப்பட்டு வந்தது. தற்போதெல்லாம் 65 முதல் 70 மீட்டர் வரை தான் சிக்ஸர் அடிக்கும் தூரம் இருக்கிறது. இதனால் அடித்து நொறுக்கிவிடுகிறார்கள் அப்படி மிக அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்களை தற்போது பார்ப்போம்.

afridi

- Advertisement -

சாகித் அப்ரிடி :

இவர் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஆவார். அதிரடிக்கு பெயர் போனவர். 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 158 மீட்டர்களுக்கு ஒரு சிக்சரை விளாசிய இதுதான் தற்போது வரை மிக அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸர் ஆகும்.

Yuvi 2

யுவராஜ் சிங் :

- Advertisement -

இந்தியாவின் இடது கை நாயகன். இவர் 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது 30 பந்துகளுக்கு 70 ரன் விளாசினார். அந்த போட்டியின் போது பிரெட் லீ யின் பந்தில் 120 மீட்டர் சிக்சர் அடித்து இருந்தார்.

Dhoni

எம்எஸ் தோனி :

- Advertisement -

இவர் இந்தியாவின் சிக்சர் நாயகன். 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 118 மீட்டருக்கு சிக்ஸர் விளாசி இருந்தார். இதுதான் தோனி இதுவரை அதிகபட்சமாக அடித்த சிக்ஸர் இன் தூரமாகும்.

கோரி ஆண்டர்சன் :

- Advertisement -

இவர் நியூசிலாந்து அணியின் இடதுகை ஆல்ரவுண்டர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 36 பந்தில் சதம் அடித்திருந்தார் அப்போது 116 மீட்டருக்கு ஒரு சிக்சர் விளாசினார்.

gayle

கிறிஸ் கெயில் :

சிக்சருக்கு பெயர் போனவர் இவர். இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரின் போது 115 மீட்டருக்கு ஒரு சிக்சர் விளாசினார். இதன் காரணமாக இந்த பட்டியலில் இவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement