ஐபிஎல் 2022 : காலத்தின் சுழற்சியால் முதல் முறையாக ரசிகர்கள் மிஸ் செய்யப்போகும் 5 ஜாம்பவான்கள்

Top 5 IPL Legends To Be Missed In IPL 2022
- Advertisement -

ரசிகர்களையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஐபிஎல் தொடர் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள ஒரு மாபெரும் கிரிக்கெட் திருவிழா என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களின் மனதில் பதிவதற்கு அதில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.

ipl

- Advertisement -

மிஸ் யூ லெஜெண்ட்ஸ்:
சொல்லப்போனால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் தங்களது அபார திறமையால் காலம் காலமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக ஐபிஎல் வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார்கள் என்றே கூறலாம். இருப்பினும் காலத்தின் சுழற்சியால் ஒருசில வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

1. கிறிஸ் கெயில்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் எனப் போற்றப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மாபெரும் ஜாம்பவான் என்றால் மிகையாகாது. ஏனெனில் கடந்த 2008 முதல் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடிய அவர் மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்து ஐபிஎல் தொடரை பிரபலப்படுத்தியவர் என்றே கூறலாம். மொத்தம் 141 இன்னிங்ஸ்களில் 357 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ளார். மேலும் கடந்த 2013-ஆம் ஆண்டு புனே அணியை புரட்டி எடுத்த அவர் வெறும் 66 பந்துகளில் 175* ரன்கள் விளாசினார்.

gayle 2

இதன் வாயிலாக ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரர், அதிவேகமாக சதம் அடித்த வீரர் போன்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ள அவர் 142 போட்டிகளில் 4965 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் 1000 சிக்ஸர்கள் என பல பிரம்மாண்ட சாதனைகளை படைத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று கூறினால் மிகையாகாது. இருப்பினும் தற்போது 42 வயதை கடந்துவிட்ட கெயில் எனும் சூறாவளில் புயல் வயது காரணமாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றது.

- Advertisement -

2. ஏபி டீ வில்லியர்ஸ்: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி அதன்பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீண்டகாலம் விளையாடினார். உலகின் எப்பேர்பட்ட தரமான பந்துவீச்சாளர் எவ்வளவு கடினமான பந்துகளை வீசினாலும் அதை மைதானத்தின் நாலா புறமும் சிக்ஸர்களாக அடிக்கும் திறமை பெற்ற அவரை மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

abd

குறிப்பாக இந்திய நட்சத்திரம் விராட் கோலியுடன் பலமுறை இணைந்த அவர் ஐபிஎல் வரலாற்றில் டாப் 2 அதிக பார்ட்னர்ஷிப் ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார். மொத்தம் 184 போட்டிகளில் 5167 ரன்களைக் குவித்து எத்தனையோ சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர் 38 வயதை கடந்த காரணத்தால் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்றாகும்.

- Advertisement -

3. அமித் மிஸ்ரா: இந்தியாவைச் சேர்ந்த அற்புதமான சுழல் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா டெல்லி, டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். தனது அபார சுழல் பந்து வீச்சால் 154 போட்டிகளில் 166 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற அபார சாதனை படைத்துள்ளார்.

mishra

மேலும் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற மந்திர சாதனையும் படைத்துள்ளார். தற்போது 39 வயதைக் கடந்து விட்ட அவரை சமீபத்தில் நடந்த ஏலத்தில் எந்த அணியும் வாங்காத காரணத்தால் இனிமேல் இவரை ஐபிஎல் தொடரில் பார்ப்பது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

4. ஹர்பஜன் சிங்: இந்தியாவின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரிலும் தனது திறமையால் 2008 முதல் 2021 வரை மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற அணிகளில் விளையாடி கடந்த வருடம் ஓய்வு பெற்றார். மொத்தம் 163 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக டாட் பந்துகளை வீசிய பவுலர் (1268 பந்துகள்) என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். அத்துடன் மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகளில் விளையாடி 4 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

Harbhajan

5. சுரேஷ் ரெய்னா: மேற்கூறிய வீரர்கள் கூட வயது காரணமாக ஓய்வு பெற்றதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது. ஆனால் வெறும் 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள நட்சத்திர இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது உண்மையாகவே நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியாகவும் அபாரமாகவும் விளையாடிய அவர் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார்.

அந்த அணி இதுவரை வாங்கியுள்ள 4 கோப்பைகளிலும் ரெய்னாவின் பங்கு அளப்பரியதாகும். அந்த அணியில் கேப்டன் தோனிக்கு பின் முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி வந்த அவர் 2016-ஆம் ஆண்டு சென்னை அணி தடை பெற்றபோது குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன்பின் மீண்டும் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை திரும்பியபோது அந்த அணியில் விளையாடி வந்த அவர் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை தொட்ட முதல் வீரர் போன்ற பல சாதனைகளை படைத்த காரணத்தால் அவரை மிஸ்டர் ஐபிஎல் என வல்லுநர்கள் அழைத்தனர்.

Raina

அதேபோல் சென்னை ரசிகர்களும் அவரை சின்னத்தல என கொண்டாடி வந்த நிலையில் சமீப காலங்களாக பார்மின்றி தவித்து வரும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாத காரணத்தால் அவரை சமீபத்தில் நடந்த ஏலத்தின் போது சென்னை அணி நிர்வாகம் கூட வாங்கவில்லை. மொத்தம் 205 போட்டிகளில் 5528 ரன்களை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் தற்போது நிதர்சனத்தை புரிந்து கொண்ட அவர் இந்த வருடம் ஒரு வர்ணனையாளராக ஐபிஎல் தொடரில் கால்தடம் பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement