சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக இருந்தும் ஐ.பி.எல் லில் சொதப்பிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Ponting

உள்ளூர் போட்டிகளில் விளையாடி நல்ல பெயரை சம்பாதித்து ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்று நன்றாக ஆடி பிறகு தேசிய அணியில் விளையாடிய வீரர்கள் கதையை பற்றி நாம் நன்கு அறிவோம். அப்படியே நேர்மாறாக தேசிய அணியில் நன்றாக விளையாடி ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிய ஜாம்பவான் வீரர்களை பற்றி பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக திகழ்ந்து ஐ.பி.எல் தொடரில் சொதப்பியவர்களை இந்த லிஸ்டில் நாம் காண உள்ளோம்.

Yuvraj

1. யுவராஜ் சிங் :

இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் பற்றி சிறப்பாக பேசும் அளவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்தியாவுக்கான சர்வதேச அரங்கில் பல போட்டிகளில் விளையாடி ஏராளமான வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார். 2007 டி 20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதன் பின்னணியில் பெரிய பங்கு அவருக்கு இருந்தது. கென்யாவுக்கு எதிராக 2000 ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து, யுவராஜ் 304 ஒருநாள் மற்றும் 58 டி 20 போட்டிகளில் விளையாடி 8,701 ரன்கள் ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 1,177 ரன்கள் டி20 போட்டிகளில் எடுத்துள்ளார். மேலும்111 ஒருநாள் விக்கட்டுக்களையும் மற்றும் 28 டி 20 விக்கட்டுக்களையும் எடுத்துள்ளார்.

இந்தக் காரணத்தினால் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போகப்பட்டு மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு அப்படியே நேர்மாறாக விளையாடி ஐபிஎல் தொடரில் மிகவும் சொதப்பிய வீரர்களில் இவரும் ஒருவர்.

தனது ஐபிஎல் வாழ்க்கையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் உடன் தொடங்கினார், பின்னர் புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன் அணியில் விளையாடினார். 132 ஐபிஎல் போட்டிகளில் சராசரியாக 24.77 ரன் விகிதம் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆக 129.71 உடன் யுவராஜ் 2750 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் . மேலும் பந்துவீச்சில் அவர் 29.91 சராசரியுடன் 36 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் அவரது எக்கானமியும் 7.43 என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Ponting

2. ரிக்கி பாண்டிங் :

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அவரது காலகட்டங்களில் பிரபலமான பேட்ஸ்மேன்களில் ஒருவர். கிரிக்கெட் உலகத்தை பொறுத்தவரை மிக வெற்றிகரமான கேப்டனாக வாகை சூடினார். இருப்பினும் ஐபிஎல் லீக் ஆட்டங்களில் அவர் சரியாக பர்பார்ம் செய்யவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற உரிமையாளர்களுக்காக விளையாடிய பாண்டிங் வெறும் 10 ஆட்டங்களில் 10.1 சராசரியாக கொண்டு 91 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் 2013 இல் மும்பை மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் .

ஆனால் அவரால் அதை சரிவர செய்ய முடியாத காரணத்தினால் தனது கேப்டன்சி பதவியை இளம் வீரரான ரோகித் சர்மாவுக்கு அதை விட்டுக் கொடுத்தார். ரோகித் சர்மா கேப்டனாக பதவியேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வாங்கி தந்தார். அதன் பின்னர் 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமாக தனது அணியை வழிநடத்தி கோப்பையை வாங்கி தந்துள்ளார்.ஒருகட்டத்தில் அவர் எடுத்த முடிவு இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பெயரையும் பெருமையும் வாங்கி தந்துள்ளது. வீரராக ஓய்வுபெற்ற ரிக்கி பாண்டிங் முதலில் மும்பை அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தார் தற்பொழுது டெல்லி அணிக்காக பயிற்சியாளராக உள்ளார்.

michael-clarke

3. மைக்கேல் கிளார்க் :

ஆஸ்திரேலியாவின் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் மைக்கேல் கிளார்க் ஆவார் .சர்வதேச அரங்கில் எதிரிகளை இரக்கமின்றி தாக்கக் கூடிய ஆற்றல் உடையவர். கிளார்க் 115 டெஸ்ட் மற்றும் 245 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி 8643 டெஸ்ட் ரன்களையும் மற்றும் 7981 ஒடிஐ ரன்களையும் குவித்துள்ளார். இருப்பினும், ஆல்- ஐபிஎல்லில் தனது அதிரடியான ஆட்டத்தை காண்பிக்க தவறிவிட்டார், இதன் விளைவாக, ஒரு சீசனில் மட்டுமே இவரால் விளையாட முடிந்தது.

புனே வாரியர்ஸுடன் 2012 பதிப்பில் அறிமுகமானார். அந்த அணிக்காக அவர் வெறும் 6 ஆட்டங்களில் 16.3 சராசரியாக கொண்டு வெறும் 98 ரன்கள் மட்டுமே குவித்தார். பந்துவீச்சைப் பொருத்தவரை, 6 ஆட்டங்களில் வெறும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.காயங்கள் மற்றும் சர்வதேச கடமைகள் காரணமாக, கிளார்க் டி 20 சாம்பியன்ஷிப்பின் வேறு எந்த பதிப்பிலும் இடம்பெறவில்லை.

Ganguly 1

4.சவுரவ் கங்குலி :

உலகில் எந்த அணிக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பக்கமாக இந்தியாவை மாற்றுவதில் பெயர் பெற்ற சவுரவ் கங்குலியால் இந்தியன் பிரீமியர் லீக்கில் அதே மந்திரத்தை செய்ய முடியவில்லை. கங்குலி 2008 முதல் 2012 வரை ஐந்து ஆண்டுகள் ஐ.பி.எல்’இல் பங்கேற்றார். 2008 பதிப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) கேப்டனாக தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார்.

அவர் கேப்டனாக பதவி ஏற்ற வருடம் கேகேஆர் அணி 6வது இடத்தை பிடித்தது. இதன் விளைவாக, 2009 ஆம் ஆண்டில் அணியை வழிநடத்தும் பொறுப்பை பிரெண்டன் மெக்கல்லம் ஒப்படைத்தார். இருப்பினும் அடுத்த ஆண்டும் அந்த அணி பாயிண்ட்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. மற்றும் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் இந்த நடவடிக்கை எந்தவொரு நல்ல முடிவையும் பெறவில்லை, கே.கே.ஆருடனான ஒப்பந்தம் 2010 இல் முடிவடைந்தது. அதன் பிறகு அவர் புனே வாரியர்ஸ் அணிக்காக 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் பங்கெடுத்தார். தனது குறுகிய ஐபிஎல் வாழ்க்கையில், கங்குலி 59 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 25.4 சராசரியாக கொண்டு வெறும் 1,349 ரன்களை மட்டுமே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Flintoff

5. ஆண்ட்ரூ பிளின்டாஃப் :

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பது நமக்கு நன்றாக தெரியும். அவர் 4.9 மற்றும் 2.97 என்ற ரன் எக்கானமி விகிதத்தில் 141 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 79 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி 169 ஒருநாள் விக்கட்டுகளையும் மற்றும் 226 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆண்ட்ரூ பிளின்டாஃப் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிக்காக 2009 ஐ.பி.எல் ஏலத்தில் 1.55 மில்லியன் டாலர்களுக்கு வாங்கபட்டார் ஃபிளிண்டோஃப் 2009 ஆம் ஆண்டில் மிகவும் விலையுயர்ந்த ஐபிஎல் வீரர்களில் ஒருவர்.

இருப்பினும், அவர் சூப்பர் கிங்ஸிற்கான வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடினார். 62 ரன்கள் மட்டும் எடுத்து பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அவர் தனக்காக வழங்கப்பட்ட தொகையை நியாயப்படுத்தும் அளவுக்கு விளையாட முடியவில்லை. அதன்பின்னர் அவர் எந்த ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.