- Advertisement -
உலக கிரிக்கெட்

கிரிக்கெட்டில் முதல் 5 இடங்களை பிடித்த பெண் வர்ணனையாளர்கள் இவர்களா..!

ஆண் வர்ணனையாளர்களையும், தொகுப்பாளர்களையும் பார்த்து சலித்து போன கிரிக்கெட் ரசிகர்களுக்கும், புத்துணர்ச்சி தரும் விதத்தில் கிரிக்கெட் உலகில் சில பெண் தொகுப்பாளினிகளை களமிறங்கியது சில தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள். அதில் ஒரு சில தொகுப்பாளினிகள் ரசிகர் இடத்தில் பெரும் பிரபலமடைந்தனர். இவர்களை பார்பதற்காகவே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் முன்னர் ஒளிபரப்பாகும் எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ் பகுதியை பார்க்கும் சில ரசிகர்களும் உள்ளனர். அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த டாப் 5 பெண் தொகுப்பாளினிகளை பற்றி பார்ப்போம்.

5.மந்திரா பேடி:- ஐபிஎல் வரலாற்றின் முதல் பெண் தொகுப்பாளினி என்று இவரையும் கூறலாம். தனது கவர்ச்சியான தோற்றத்தினாலும், நவநாகரிக உடைகளினாலும் ஐபிஎல் போட்டியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா பேடி. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் சில பல அரசியல் காரணங்களால் தென்னாப்ரிக்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது நடிகையாக இருந்த மந்திரா பேடிக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொகுப்பாளினியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

4.லேகா வாஷிங்டன் ;- பிரபல ‘எஸ் எஸ் மியூசிக்’ என்ற தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர். பின்னர் பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவுடன் இணைந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் கனடா நாட்டில் நடைபெற்ற டி20 தொடரிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

3.சோனாலி நக்ரானி :- 2003 ஆண்டு நடைபெற்ற சர்வதேச மிஸ் இந்திய போட்டியின் வெற்றியாளரான இவர், ஐபிஎல் தொடரின் முதல் சீசஸனில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். 2008 நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் தனி பெண்ணாக தொகுப்பாளினியாக தொகுத்து வழங்கினார். மேலும், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போதும் ‘இ எஸ் பி என்’ தொலைக்காட்சியிலும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

- Advertisement -

2.அர்ச்சனா விஜயா:- கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமான பெண் தொகுப்பாளினிகளில் இவரும் ஒருவர். கிரிக்கெட் தொகுப்பாளினியாக வருவதற்கு முன்னர் பிரபல ‘வி’ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். கடந்த 2011 ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் தொகுப்பாளினியாக பங்குபெற்று ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும், இவர் 2012 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

1.மயந்தி லன்ஞர் :- தற்போது உள்ள பெண் தொழுப்பாளினிகள் மத்தியில் இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்று ஆணித்தனமாக கூற முடியும். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவியான இவர், இளைஞர்களின் அபிமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் தொகுப்பாளினி பணியை தொடந்து வருகிறார்.

- Advertisement -