தற்கால கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படியாவது ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகமாக இருக்கிறது. தங்களது சர்வதேச அணிக்கு ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடிவிட்டால் சர்வதேச அணியிலும் இடம் கிடைக்கும் பணம் சம்பாதித்தது போலவும் இருக்கும் என நினைத்து ஐபிஎல் தொடரில் ஆட பல இளம் வீரர்கள் விரும்புகிறார்கள். இப்படி ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்த 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்.
ஜஸ்பிரித் பும்ரா :
2013 ஆம் ஆண்டு 20 வயது இளம் வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். இவர் உண்மையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தொடர்ந்து மூன்று வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நன்றாக பந்து வீசியதன் காரணமாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது வரை இந்திய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
இவரும் குஜராத்தை சேர்ந்தவர். இவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் ஆடி வருகிறார். இவரும் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் தேர்வானார். தற்போது வரை இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கிறார்
யுஸ்வேந்திரா சாகல் :
இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர். முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். அங்கு பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் இணைந்து விளையாடினார். பின்னர் விராட் கோலி வரை தனது இந்திய அணியில் எடுத்துக்கொண்டு நிரந்தர வீரராகவும் மாற்றினார்.
புவனேஸ்வர் குமார் :
இவர் உண்மையில் ஐபிஎல் தொடரில் விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர். அல்ல. 2012 ஆம் ஆண்டு இவரை முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார். ஓரளவிற்கு நன்றாக ஆடியதன் மூலம் ஐபிஎல் தொடரிலும் நன்றாக பந்துவீசினார். இதன் காரணமாக இந்திய அணியிலும் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.
ரவீந்திர ஜடேஜா :
2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் கொச்சி அணிக்காக விளையாடியவர். இவர் 2010 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடிய காரணத்தால் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது வரை இந்திய அணியின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஆக இருந்து வருகிறார்.