வெளிநாட்டு டி20 லீக்குகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐ.பி.எல் தொடரில் சோடை போன – 5 வீரர்கள்

IPL
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர்கள், இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு வீரர்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்ட ஒரு சிறந்த அடித்தளமாக இருக்கிறது. ஐபிஎல்லைப் போலவே உலகின் பல்வேறு நாடுகளிலும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தொடர்களில் சிறப்பாக விளையாடிதால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற பல வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் சரியாக விளையாட முடியாமல் சோடை போயிருக்கின்றனர். இந்த பதிவில் வெளிநாட்டு ப்ரீமிரியர் லீக் போட்டிகளில் அசத்தியிருந்தாலும், ஐபிஎல் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியருக்கும் ஐந்து வீரர்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

finch

ஆரோன் பிஞ்ச்:

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடி 9718 ரன்கள் அடித்திருந்தாலும், இவர் ஐபிஎல் தொடர்களில் தனது திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு அணிகளாக மாறி மாறி விளையாடி வந்த இவர் ஒரு தொடரில்கூட சிறப்பாக விளையாடியது கிடையாது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rillee

ரிலே ரோசோவ்:

- Advertisement -

2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கும் இவர், ஐபிஎல் தொடர்களில் அடித்துள்ள மொத்த ரன்களின் எண்ணிக்கை வெறும் 53 மட்டுமே. உலகின் பல லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடி இருக்கும் இவர், தென் ஆப்ரிக்க அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 214 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர், 5000த்திற்கும் மேற்பட்ட ரன்களை அடித்து இருக்கிறார்.

Munro

காலின் முன்ரோ:

- Advertisement -

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாகவே இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. பிபிஎல், சிபில், பிஎஸ்எல் என பல்வேறு ப்ரீமிரியர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 7000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் இவர், ஐபிஎல் தொடர்களில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐபிஎல்லில் இவரின் சராசரி 14ஆக மட்டுமே இருக்கிறது.

christian 1

டேனியல் கிறிஸ்டியன்:

- Advertisement -

ஆல்ரவுண்டரான கிறிஸ்டியன் மற்ற லீக் போட்டிகளில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வந்தாலும் அவரால் ஐபிஎல் தொடரில் தனது ஆல்ரவுண்டர் திறமையை வெளிக்காட்ட இயலவில்லை. 350 டி20 போட்டிகளில் 259 விக்கெட்டுகள் மற்றும் 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள இவர், பெங்களூர் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாடி வருகிறார்.

ingram

காலின் இங்ரம்:

டி20 போட்டிகளில் நான்கு முறை சதமடித்து அசத்தியிருக்கிறார் காலின் இங்ரம். மேலும் 41 அரைசதங்களையும் வெவ்வேறு ப்ரீமியர் லீக் தொடர்களில் இவர் அடித்திருந்தாலும், ஐபிஎல் தொடரில் ஒரு முறைகூட அரைசதம் அடித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2019ஆம் ஆண்டு தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் அந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Advertisement