ஐ.பி.எல் வரலாற்றில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள 5 பெஸ்ட் கேப்டன்கள் – லிஸ்ட் இதோ

ipl

ஐபிஎல் தொடர் டி20 போட்டிகள் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 10 அணிகள் விளையாடி உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வருடமும் வித்தியாச, வித்தியாசமான கேப்டன்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில கேப்டன்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணியாற்றி உள்ளனர். கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

dhonidecision

தோனி – 174 போட்டிகள் :

மகேந்திர சிங் தோனி 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். மேலும், புனே அணிக்கும் ஒரு சில போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். 174 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள இவர் 104 போட்டிகளில் வெற்றி பெற்றும் 69 போட்டிகளில் தோல்வி அடைந்தும் இருக்கிறார்.

Gambhir 1

கௌதம் கம்பீர் – 129 போட்டிகள் :

- Advertisement -

இவர் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இருந்திருக்கிறார். 129 போட்டிகளில் இரண்டு அணிகளையும் வழிநடத்தி உள்ளார். அதில் 71 போட்டிகளில் வெற்றி பெற்றும் 57 போட்டிகளில் தோல்வி அடைந்தும் இரண்டு கோப்பைகளையும் கைப்பற்றியிருக்கிறார்.

kohli

விராட் கோலி – 110 போட்டிகள் :

2008 ஆம் ஆண்டிலிருந்து பெங்களூரு அணிக்கு ஒரு வீரராக விளையாடி வந்தாலும் 2011 ஆம் ஆண்டு தான் கேப்டனாக மாற்றப்பட்டார். மொத்தம் இவர் 110 போட்டிகளில் கேப்டனாக இருந்து 49 போட்டிகளில் வெற்றி பெற்றும், 55 போட்டிகளில் தோல்வி அடைந்தும் இருக்கிறார். 4 போட்டிகள் டை ஆகியுள்ளன. 4 போட்டிகள் இயற்கை சூழ்நிலை காரணமாக நடைபெறாமல் போயுள்ளன.

ரோகித் சர்மா – 104 போட்டிகள் :

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் 2013ம் ஆண்டிலிருந்து கேப்டனாக இருந்து வருகிறார். மொத்தம் 104 போட்டிகளில் கேப்டனாக இருந்து 60 போட்டிகளில் வெற்றி பெற்றும் 42 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறார். இவர் நான்கு கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறார்.

Gilchrist 1

ஆடம் கில்கிறிஸ்ட் – 74 போட்டிகள் :

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். மொத்தம் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 74 போட்டிகளில் கேப்டனாக இருந்து 35 போட்டிகளில் வெற்றி பெற்று 39 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.