ஐ.பி.எல் கிரிக்கெட்டின் வெற்றிகரமான 5 கேப்டன்கள். உங்களுக்கு தெரியுமா ? – முழு லிஸ்ட் இதோ

ipl
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 12 ஐபிஎல் தொடரில் நடைபெற்று முடிந்துள்ளது. பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடக்குமா ? என்று தற்போது வரை சந்தேகத்தில் தான் உள்ளது. தற்போது இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் அணிகளின் மிகச் சிறந்த கேப்டன்களில் பட்டியலைப் பற்றி தற்போது பார்ப்போம்.

dhoni

- Advertisement -

மகேந்திர சிங் டோனி :

சென்னை அணியின் தத்துப் பிள்ளையான இவர் ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறலாம். தான் பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் தன் அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மூன்று முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். ஏழு முறை இறுதிப்போட்டி தனது அணியை அழைத்துச் சென்ற இவரது வெற்றி சதவீதம் 60 ஆகும்.

ரோஹித் சர்மா :

- Advertisement -

இவர் மும்பை அணியின் கேப்டனாக 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதிலிருந்து அந்த அணி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது வரை நான்கு கோப்பைகளை கைப்பற்றி விட்டது.

Gambhir

கௌதம் கம்பீர் :

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த கேப்டன். இவரது தலைமையில் 2012 மற்றும் 2014ம் ஆண்டு கோப்பைகள் கைப்பற்றப்பட்டது. இவரது வெற்றியின் சதவீதம் 55%.

டேவிட் வார்னர் :

- Advertisement -

டெல்லி அணியில் இருந்து ஹைதராபாத் அணிக்கு வந்தவர் இவர். இவர் மூலம்தான் ஹைதராபாத் அணி 2016 ஆம் ஆண்டு கோப்பையை கைபற்றியது. 47 போட்டிகளில் கேப்டனாக இருந்த இவர் 26 போட்டிகளை வென்றுள்ளார்.

warne

ஷேன் வார்னே :

2008 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது ராஜஸ்தான் அணிக்கு ஷேன் வார்ன் கேப்டனாக இருந்தார். அந்த அணி முதன் முதலில் கோப்பையை வெல்வதற்கு இவர்தான் காரணம். மொத்தம் 55 போட்டிகளில் கேப்டனாக இருந்த இவர் 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement