இந்த வருடத்தோடு கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்ல காத்திருக்கும் 5 சர்வதேச வீரர்கள் – லிஸ்ட் இதோ

Jadhav
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அணியின் நட்சத்திர வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தங்களது ஓய்வினை அறிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்தியா சார்பாக எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் உட்பட பல முக்கிய வீரர்கள் தங்களின் ஓய்வினை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவிக்கும் 5 வீரர்கள் பற்றி இதில் பார்ப்போம்.

Burns

- Advertisement -

1.ஜோ பர்ன்ஸ் :

நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் 31 வயதான ஜோ பர்ன்ஸ் 2021 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kedar-Jadhav

2.கேதர் ஜாதவ் :

- Advertisement -

2015ம் ஆண்டு அறிமுகமான இவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற வைத்துள்ளார். 35 வயதாகும் கேதர் ஜாதவ் தற்போது சிறந்த பார்மில் இல்லாத காரணத்தினால் 2021 ஆம் ஆண்டு தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

faf

3.ஃபாப் டு பிளெசிஸ் :

- Advertisement -

தற்போது நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டு பிளெசிஸ் 199 ரன்களை குவித்திருந்தார். இவர் தனது தென்னாப்பிரிக்கா அணிக்காக பல போட்டிகளில் விளையாடி வெற்றியை தந்துள்ளார். இந்நிலையில், 36 வயதான டு பிளெசிஸ் 2021 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Hafeez

4.முகமது ஹபீஸ்

- Advertisement -

40 வயதான முகமது ஹபீஸ் பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக கருதப்படுகிறார். இவர் டி20 போட்டியில் சிறந்த வீரராக திகழ்கிறார். அதுமட்டுமின்றி 2021ல் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரை தனது அணிக்காக வெற்றி பெற்றுத்தந்த பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

anderson 2

5.ஜேம்ஸ் ஆண்டர்சன் :

தனது பந்து வீச்சின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் பலரை திணற வைத்தவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 600 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 38 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2021இல் தனது ஓய்வு அறிவிப்பார் என்று பேசப்படுகிறது.

Advertisement