அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியது மட்டுமின்றி அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Ganguly

முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் ஆடும் போது சற்று பதட்டமாக இருக்கும். இருந்தாலும் பல வீரர்கள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி அசத்தியுள்ளனர். அப்படி தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய 5 இந்திய வீரர்கள் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Ganguly

சௌரவ் கங்குலி :

முன்னாள் இந்திய அணியின் கேப்டனான இவர் தனது 23 ஆவது வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் 1996ம் ஆண்டு புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி அசத்தினார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே இவர் 131 ரன்கள் விளாசி இருந்தார்.

பிரித்வி ஷா :

- Advertisement -

20 வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமானவர். இளம் வீரராக இருந்தாலும் பலமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த ஆண்டு அறிமுகமாகி 134 ரன்கள் எடுத்திருந்தார்.

குண்டப்பா விஸ்வநாத் :

1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கான்பூர் மைதானத்தில் இவர் முதன் முதலில் அறிமுகமானார் .அப்போது முதல் போட்டி என்றும் கூட பாராமல் அதிரடியாக விளையாடி 137 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ரோகித் சர்மா :

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே அதிரடியாக ஆடி இவரை நாம் பார்த்திருப்போம். ஆனால் 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். அப்போது 306 பந்துகளுக்கு 177 ரன்கள் விளாசி இருந்தார் ரோகித் சர்மா.

Dhawan

ஷிகர் தவான்

2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோனியின் தலைமையில் மொகாலி மைதானத்தில் இவர் அறிமுகமானார். அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே 174 பந்துகளுக்கு 187 ரன்கள் அடித்து விளாசி இருந்தார் ஷிகர் தவான்.