- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய டி20 அணியில் இருந்து சமீபத்தில் காணாமல் போன 5 வீரர்கள். மீண்டும் சேன்ஸ் கிடைப்பது கஷ்டம் – லிஸ்ட் இதோ

இந்திய அணி எப்பொழுதுமே சிறந்த வீரர்களை மட்டுமே தனது கைவசம் வைத்துக் கொண்டிருக்கும். மேட்ச் வின்னர்களை மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியம் முதற் கண்ணோட்டத்தில் பார்க்கும்.இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பை டி20 தொடருக்காக தற்போது லிருந்து இந்திய அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அடுத்த ஆண்டும் டி20 தொடர் நடக்க இருப்பதால், இப்போதிலிருந்தே கவனம் செலுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கும் அளவுக்கு ஒரு அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் வடிவமைத்து வருகிறது. அப்படி சிறந்த வீரர்களை ஒரு பக்கம் எடுக்கையில் பழைய வீரர்கள் ஒருசிலரை அணியில் இருந்து வெளியேற்றி வருகிறது. அப்படி இந்திய டி20 அணியில் விளையாடி சமீபத்தில் காணாமல் போன 5 வீரர்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

தினேஷ் கார்த்திக் :

- Advertisement -

2007ஆம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பை டி20 தொடர் முதல் ஆடி வரும் தினேஷ் கார்த்திக் இதுவரை 26 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார், அதில் 399 ரன்களை 33.25 என்கிற அவெரேஜ் விகிதத்தில் அடித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 143.53 என்பது குறிப்பிடத்தக்கது. போதுமான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அவ்வப்போது விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019ஆம் ஆண்டு தான் ஆடியுள்ளார். அதன் பின்னர் தற்பொழுது வரையில் அவருக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. கடந்த ஐபிஎல் சீசனிலும் சரியாக ஆடாத தினேஷ் கார்த்திக் வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். புதிய இளம் வீரர்கள் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஒரு பக்கம் நன்றாக விளையாடி வர வாய்ப்புகள் அனைத்தும் அவர்கள் பக்கமே செல்கிறது. எனவே இனிவரும் டி20 தொடர்களில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிக அரிதான விஷயம் ஆகும்.

விஜய் சங்கர் :

- Advertisement -

தினேஷ் கார்த்திக்கை போன்றே விஜய் சங்கர் கடைசியாக 2019ஆம் ஆண்டு தான் கடைசியாக இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடினார். சரியாக விளையாடாத விஜய் சங்கர் அப்போதிலிருந்தே புறக்கணிக்கப்பட்டு உள்ளார். ஐபிஎல் தொடர்களிலும் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடுவது விஜய் சங்கர் 101 ரன்களை குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 25.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 138 புள்ளி 35 ஆகும். தனது கடைசி போட்டியில் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடைசியாக அவர் பவுலிங் வீசியபோது 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கலீல் அஹமது :

- Advertisement -

23 வயதான கலீல் அஹமது இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய அணி ஜாகிர் கானுக்கு பின்னர் ஒரு சிறந்த இடது கை பந்து வீச்சாளரை தேடி வந்த நிலையில் கலீல் அஹமது அதற்கு மிகப் பொருத்தமான பந்துவீச்சாளர் என்று அவர் அறிமுகம் ஆன பொழுது எல்லா ரசிகர்களும் பேசி வந்தனர். இருந்தபோதிலும் அவரது மோசமான ஆட்டத்தின் காரணத்தினால் அவர் அவ்வளவாக இந்திய அணியால் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவரது எக்கானமி 8.82 ஆகும். மேலும் சமீப ஐபிஎல் தொடர்களில் அவர் நன்றாக விளையாட காரணத்தினால், அவரை இந்திய அணி மீண்டும் அழைத்துக் கொள்ளவில்லை. மேலும் தங்கராசு நடராஜனின் வருகையால், இந்திய அணி அவரையே தற்போது இடது கை பந்து வீச்சாளராக டி20 போட்டிகளில் களமிறக்கி வருகிறது.

சிவம் துபே :

- Advertisement -

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக சில மாதங்கள் விளையாடாமல் போனார் அவர் இடத்தை நிரப்புவதற்காக சிவம் துபே இந்திய அணியால் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
2019ஆம் ஆண்டு இறுதி முதல் 2020 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை 13 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிவம் 105 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 136.36 ஆகும். மேலும் அவர் தனது 9 போட்டிகளில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

மேலும் பவுலிங்கில் 11 போட்டிகளில் விளையாடியுள்ளார் சிவம் துபேவெறும் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். அவரது எக்கானமி பத்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான ஆட்டத்தின் காரணமாக அவரை இந்திய அணி படிப்படியாக வெளியேற்றி விட்டது. ஐபிஎல் தொடர்களிலும் அவரது ஆட்டம் சரியாக இல்லாத காரணத்தினால் வாய்ப்பு கிடைக்காமல் சிவம் டுபே தவித்து வருகிறார்.

க்ருனால் பண்டியா :

30 வயதான க்ருனால் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 18 போட்டிகளில் விளையாடியுள்ளார் அதில் அவர் மொத்தமாக 121 ரன்களை அடித்துள்ளார். அவரது ஆவரேஜ் 24.2 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் நூத்தி முப்பத்தி 131.52 ஆகும். பந்து வீச்சாளராக இதுவரை 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் பாண்டியா. அவரது பவுலிங் எக்கானமி 8.11 ஆகும். வாய்ப்பு கிடைத்தும் சரியாக ஆடாத பாண்டியா அதன்பின்னர் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். இருந்தபோதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடர்களில் ஆடி வந்த போதிலும், அவ்வளவு சிறப்பாக செயல்படாத காரணத்தினால் இந்திய அணி அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. கடைசியாக அவர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அல்லாமல் ஒருநாள் போட்டியில் முதன்முதலாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by