சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை விளாசிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டிகள் என்றாலே அதன்மேல் ரசிகர்களுக்கு தனி ஆர்வம்தான். மூன்று மணி நேரத்திலேயே வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும் என்பது மட்டுமில்லாமல், அதிக சிக்ஸர்களும் பவுண்டரிகளும் இந்த வகையான போட்டிகளில் அடிக்கப்படுவதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. இந்த பதிவில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Pandya-3

- Advertisement -

05. ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான பாண்டியா, டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பினிஷராகவும் இருந்து வருகிறார். இதுவரை 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஆனால் பவுண்டரிகளைவிட அவர் அடித்துள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதுவரை 30 சிக்ஸர்கள் அடித்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 147ஆக இருக்கிறது.

morkel 1

04. அல்பி மோர்கல்:

- Advertisement -

தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரரான இவர், ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் இந்திய ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவராக மாறிப்போனார். 50 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் அடித்துள்ள மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 39ஆக இருக்கிறது. மேலும் 29 பவுண்டரிகளையும் இவர் அடித்துள்ளார்.

russell

03. ஆண்ட்ரே ரஸல்:

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 51 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் ரஸலுக்கு, அதில் 43 முறை பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 34 பவுண்டரிகளை அடித்துள்ளார் என்பதோடு மட்டுமல்லாமல் அதைவிட அதிக அளவிலான சிக்ஸ்ர்களையும் அடித்துள்ளார். இவர் மொத்தம் 45 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

Lewis

02. எவின் லூயிஸ்:

- Advertisement -

29 வயதுடைய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான லூயிஸ், தற்போது வரை 38 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இவருக்கு சிக்ஸர்கள் அடிக்கும் திறமை இயற்கையாகவே அமைந்திருக்கும்போல, இரண்டு டி20 சதங்களை அடித்து அசத்தி இருப்பதோடு 85 சிக்ஸர்களையும் பறக்கவிட்டிருக்கிறார். மேலும் 77 பவுண்டரிகளும் இவருடைய கணக்கில் அடக்கம்.

01.கைரன் பொல்லார்ட்:

எவின் லூயிசும், கைரன் பொல்லார்டும் ஒரே அளவிலான சிக்ஸர்களை மட்டுமில்லாமல் ஒரே அளவிலான பவுண்டரிகளையும் அடித்துள்ளது வியப்பிற்குரிய ஒரு விடயமாகும். இவரும் 85 சிக்‌ஸர்கள் மற்றும் 77 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். ஆனால் லூயிஸை விட கைரன் பொல்லர்ரட் அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement