ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 பெஸ்ட் பவுலர்ஸ் – லிஸ்ட் இதோ

IPL-bowlers-1

ஐபிஎல் வரலாற்றில் தற்போது வரை நூற்றுக்கணக்கான பந்துவீச்சாளர்கள் விளையாடியிருக்கிறார்கள். அதில் ஒருசில பந்துவீச்சாளர்களை ஜொலித்திருக்கிறார்கள். அப்படி ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் பந்துவீச்சாளர்கள் பட்டியலை தற்போது பார்ப்போம்.

லசித் மலிங்கா – 170 விக்கெட் :

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 12 வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இவர் 122 போட்டியில் ஆடி 170 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்

Mishra

அமித் மிஸ்ரா – 157 விக்கெட் :

- Advertisement -

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான இவர் டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் 147 போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Harbhajan

ஹர்பஜன்சிங் – 150 விக்கெட் :

பத்து வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி தற்போது கடந்த இரண்டு வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் .160 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Chawla

பியூஸ் சாவ்லா – 150 விக்கெட் :

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். மொத்தம் 157 போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Bravo

டுவைன் பிராவோ – 141 விக்கெட் :

இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு ஆல்ரவுண்டர் இவர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பத்து வருடங்கள் விளையாடியுள்ள இவர் 134 போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.