ஐ.பி.எல் வரலாற்றில் பவர்பிளே 6 ஓவர்களில் குவிக்கப்பட்ட டாப் 5 அதிகபட்ச ரன்கள் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் பேட்டிங் தான் அதிகம் பேசும். அதிலும் குறிப்பாக பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் ஒரு அணி அதிகமாக ரன் குவித்து விட்டால் போட்டியின் இறுதிவரை அந்த அணியின் கையே ஓங்கியிருக்கும் . அப்படி முதல் 6 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

kkr

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – 105 ரன்கள் :

2017 ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய இந்த அணி துவக்க வீரர்கள் 105 ரன்கள் எடுத்தார்கள்.

Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் – 100 ரன்கள் :

- Advertisement -

2014 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற செமி பைனல் போட்டியில் முதல் 6 ஓவரில் 100 ரன்கள் விளாச பட்டது. இதில் மூன்றாவதாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி பெரிய ரன் குவிப்பிற்கு உதவினார்.

raina

சென்னை சூப்பர் கிங்ஸ் – 90 ரன்கள் :

2015 ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 ஓவரில் 90 ரன்கள் விளாசி இருந்தது.

கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா – 87 ரன்கள் :

2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொச்சி அணியின் துவக்க வீரர்கள் முதல் ஆறு ஓவர்களுக்கு 87 ரன்கள் விளாசினர்.

kxip

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 86 ரன்கள் :

2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பட்டையை கிளப்பிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் முதல் 6 ஓவர்களில் 86 ரன்கள் விளாசினார் .இதன் மூலம் இந்த பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.