ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 ஓவர்களான பவர்பிளே ஓவர்களில் விளாசப்பட்ட டாப் 5 ஸ்கோர்கள் – லிஸ்ட் இதோ

Raina
- Advertisement -

பொதுவாக கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டும் சம அளவில் மோத வேண்டும் அப்போதுதான் போட்டியில் அனல் பறக்கும் என அனைவரும் விரும்புவார்கள். ஆனால் ஐபிஎல் போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட்டை பார்க்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அதில் பறக்கவிடப்படும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையே அதிகமாக விரும்புவார்கள். எனவே ரசிகர்களுக்காகவே ஒரு கட்டத்தில் கொண்டு வரப்பட்டதுதான் பவர் பிளே ஓவர்களாகும். அதிலும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் ரசிகர்களை மகிழ்வித்து ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்களை குவிக்க இந்த பவர்பிளே உதவுகிறது.

gayle

- Advertisement -

மேலும் கிறிஸ் கெயில் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்களது கேரியர் முழுக்க இந்த பவர்பிளே ஓவரில் எதிரணி பவுலர்களை அல்வா போல அடித்து பெரிய ரன்களை குவித்து “பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட்” பேட்ஸ்மேன் என பெயரெடுத்தார்கள். உள்வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலையில் முதல் 6 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் அட்டகாசமாக பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை குவித்தால் அதுவே மிகப்பெரிய ஸ்கோருக்கு அடித்தளமாக அமைந்து வெற்றியையும் எளிதாக்கும்.

குறிப்பாக சேசிங் செய்யும் போது பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக பயன்படுத்தி நல்ல அடித்தளமிட்டால் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் எளிதாக வெற்றிகரமாக துரத்தி விடலாம். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே அவர்களில் அதிக ஸ்கோர்கள் அடித்த டாப் 5 போட்டிகளை பற்றி பார்ப்போம்:

Wriddhiman Saha Manan Vohra

5. பஞ்சாப் 86/1: 2014 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அந்த அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய ரிதிமான் சஹாவுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் மன்னன் வோரா அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

- Advertisement -

டேல் ஸ்டெயின், புவனேஸ்வர் குமார் போன்றவர்களை பவர்பிளே ஓவர்களில் பந்தாடிய இந்த ஜோடி 6 ஓவர்களில் 86/1 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளமிட இறுதியில் 18.4 ஓவர்களிலேயே 211 ரன்களை விளாசிய பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

4. கொச்சி 87/2: 2011 ஐபிஎல் தொடரில் அப்போதிருந்த கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி லீக் சுற்றில் சொதப்பி ப்ளே ஆப் வாய்ப்பை ஆரம்பத்திலேயே இழந்தது. இறுதியில் அந்த சீசனில் தனது லீக் கடைசி போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட அந்த அணி முதலில் அற்புதமாக பந்துவீசி ப்ராட் ஹோட்ஜ் 4 விக்கெட்டுகள் எடுத்த உதவியுடன் வெறும் 96 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 97 என்ற இலக்கை 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து எட்டிப்பிடித்து அந்த அணி பவர்பிளே ஓவர்களில் ஜெயவர்தனே 6 (3) ப்ரெண்டன் மெக்கல்லம் 29 (12) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தாலும் கூட 87/2 ரன்கள் எடுத்ததுடன் இறுதியில் பார்திவ் படேல் 21* (14) மற்றும் ப்ராட் ஹோட்ஜ் 33* (17) ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்ததால் எளிதான வெற்றி பெற்றது.

Dawyne Smith Brenden Mccullam

3. சென்னை 90/0: 2015 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 184 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு வெஸ்ட் இண்டீசின் டுவைன் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் இணைந்து பவர்பிளே ஓவர்களில் பட்டாசாக வெடித்தார்கள் என்றே கூறலாம்.

- Advertisement -

முதல் ஓவரிலிருந்தே மலிங்கா, ஹர்பஜன் போன்ற பவுலர்களை புரட்டி எடுத்த இந்த ஜோடி பவர்பிளே முடிவில் 90/0 ரன்கள் விளாசி முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது மெக்கலம் 46 (20) ஸ்மித் 62 (30) ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் சுரேஷ் ரெய்னா 43* (29) ரன்கள் எடுக்க 16.3 ஓவர்களிலேயே 189/4 ரன்களை எடுத்த சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

raina

2. சென்னை 100/2: இந்த போட்டியை யாருமே மறந்திருக்க மாட்டார்கள் என்றே கூற வேண்டும். 2014 ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக நடந்த நாக் அவுட் போட்டியில் சேவாக் 122 (58) அதிரடியால் பஞ்சாப் 226/6 ரன்கள் விளாசியது.

பின் 227 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு டு பிளேஸிஸ் டக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ஒவ்வொரு பந்திலும் சரவெடியாக வெடித்து 25 பந்துகளில் 87 ரன்களை 348.00 என்ற முரட்டுத்தனமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி 7-வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இருப்பினும் 6 ஓவர்களில் 100/2 என நல்ல தொடக்கப்பட்ட சென்னைக்கு இறுதியில் தோனியை 42* (31) தவிர வேறு யாரும் பெரிய ரன்கள் எடுக்காததால் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Narine

1. கொல்கத்தா 105/0: 2017 ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடந்த 46-ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 158/6 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய கொல்கத்தாவுக்கு கிறிஸ் லின் உடன் ஜோடி சேர்ந்த சுனில் நரைன் எதிர்பாராத வகையில் பெங்களூர் பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

பவர்பிளே ஓவர்களில் காட்டடி அடித்த இந்த ஜோடி 105/0 ரன்கள் குவித்து 7-வது ஓவரில் முதல் பந்திலேயே பிரிந்தது. அதில் லின் 50 (22) ரன்களும் நரேன் 54 (17) ரன்களும் எடுத்து நல்ல அடித்தளமிட்டதால் 15.1 ஓவர்களிலேயே கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

Advertisement