இந்த ஐ.பி.எல் தொடரில் அசத்த காத்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள் – லிஸ்ட் இதோ

Batsmans
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை மொத்தமுள்ள 60 போட்டிகளில் நடக்கப்போகிறது. இதற்காக துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்றும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 3 மைதானங்களிலேயே மொத்த போட்டிகளையும் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று இந்தத்தொடருக்கான அட்டவணையும் வெளியாகியது.

Dubai

- Advertisement -

கொரோனா வைரஸ் காலகட்டத்திலும் எப்படியாவது ஐபிஎல் தொடரின் மூலம் காசு பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது பிசிசிஐ. இதற்காக சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி 30 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதித்து போட்டியை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல வீரர்கள் பல அணிகளில் நட்சத்திர வீரராக இருந்தும் ஒரு தொடரில் கூட மிகப் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. ஆனால் சர்வதேச அளவில் நன்றாக விளையாடி இருப்பார்கள்.
இந்நிலையில் அப்படிப்பட்ட பல வீரர்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய வருடமாக அமையப்போகிறது.

Duplesis

அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் “டு பிளிசிஸ்” இந்த வருடம் பட்டையை கிளப்புவார் என்று நம்புகிறோம். மேலும் அவர் துவக்க வீரராக வாட்சனுடன் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பல வருடங்களாக நன்றாக ஆடாமல் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துணை கேப்டன் “கிளன் மாக்ஸ்வெல்” அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது.

Maxwell

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் “ஸ்டீவன் சுமித்“, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் “இயான் மார்கன்“, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் “டேவிட் வார்னர்” ஆகிய வீரர்களும் இந்த முறை அடித்து துவம்சம் செய்வார்கள் என நம்பலாம்.

Advertisement