2 கோடி அடிப்படை விலைக்கு கூட ஏலம் போக மாட்டார்கள் என்று சொல்லக்கூடிய 5 வெளிநாட்டு வீரர்கள் லிஸ்ட் இதோ

Coulternile
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடை காலம் நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதின்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விடுவித்த மற்ற தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நடைபெறும் ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 991 வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி பிரிவில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பிடிக்காத நிலையில் நிறைய வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Auction

- Advertisement -

அந்த பிரிவில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ் போன்ற தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் பெரும்பாலானவர்கள் 2 கோடிகளை மிஞ்சி பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில வெளிநாட்டு வீரர்கள் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பதால் ஏலம் போவார்களா என்பதே சந்தேகமாக இருந்தாலும் தங்களது அடிப்படை விலையை 2 கோடி என்ற அதிகபட்ச விலையாக நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் உண்மையாகவே ஒரு வீரர் தரமானவராக இருந்தால் அடிப்படை விலை 20 லட்சத்தில் இருந்தால் கூட பல கோடிகளுக்கு ஏலம் போவார்கள். அந்த வகையில் 2 கோடி என்ற அதிகப்படியான தொகையை அடிப்படைத் விலையாக நிர்ணயித்த காரணத்தாலேயே ஏலம் போக மாட்டார்கள் என்று கருதக்கூடிய சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. கிரைக் ஓவர்ட்டன்: இளம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான இவர் உள்ளூர் டி20 ப்ளாஸ்ட் தொடரில் அசத்தலாக செயல்பட்டும் இது வரை சர்வதேச அரங்கில் அறிமுகமாகவில்லை. அந்த நிலையில் 28 வயதாகும் இவர் இந்திய ஆடுகளங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் எந்தளவுக்கு அசத்துவார் என்று தெரியாத காரணத்தால் நிச்சயமாக எந்த அணியும் 2 கோடிகள் கொடுத்து வாங்காது என்று சொல்லலாம்.

Craig Overton

4. ஜெமி ஓவர்ட்டன்: அவரது சகோதரரான இவரும் இங்கிலாந்துக்காக வெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத அவர் 82 உள்ளூர் டி20 போட்டிகளில் 9.43 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசியுள்ளார். அதனால் இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் கொஞ்சமும் இல்லாத இவரையும் 2 கோடிகளை கொடுத்து எந்த அணியும் வாங்காது என்று வெளிப்படையாக சொல்லலாம்.

- Advertisement -

3. நாதன்-கோல்டர்-நைல்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 2020 முதல் அனைத்து ஐபிஎல் ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். ஆனால் எந்த சீசனிலும் காயம் காரணமாக முழுமையாக விளையாடாத அவர் 2022 சீசனில் 2 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு வாங்கப்பட்ட நிலையில் முதல் போட்டியுடன் காயமடைந்து வெளியேற்றினார்.

coulternile

அதன் பின் இதுவரை எந்த முதல் தர கிரிக்கெட்டிலும் விளையாடாத அவர் அடிக்கடி காயமடைபவராக இருப்பதுடன் 35 வயதை கடந்து விட்டதால் மீண்டும் 2 கோடிக்கு வாங்க அனைத்து அணிகளுமே யோசிக்கலாம். ஏனெனில் ரிலீ மெரிடித், சீன் அபௌட், ஜே ரிச்சர்ட்சன் என அவரை விட இளமையான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இதே ஏலத்தில் 1.5 கோடிக்கு களமிறங்குவதால் இவரை ஐபிஎல் அணிகள் கண்டு கொள்ளாது என்றே சொல்லலாம்.

- Advertisement -

2. டிராவிஸ் ஹெட்: ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரரான இவர் சமீபத்திய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் டேவிட் வார்னருடன் இணைந்து 250+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் 27 போட்டிகளில் 133.20 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ரன்களை குவிப்பவராக இருக்கும் அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடரிலேயே கடந்த வருடம் முழுமையான வாய்ப்பு பெறாமல் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே சுமாராக செயல்பட்டார்.

Travis Head 101

அதனால் இடது கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஏலத்தில் இவரை வாங்குவதற்கு கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே யோசிக்கும் என்று கூறலாம். ஒருவேளை இவர் அடிப்படை விலையை இன்னும் குறைவாக நிர்ணயித்திருந்தால் ஏதேனும் ஒரு அணியில் வாங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

1 ஏஞ்சலோ மேத்தியூஸ்: இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர வீரரான இவர் நல்ல ஆல் ரவுண்டராக இருந்தாலும் கடந்த ஒரு வருடமாக தேசிய அணிக்காகவும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் கூட டி20 போட்டிகளில் விளையாடவில்லை. நல்ல அனுபவம் இருந்தாலும் 119.55 என்ற பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 32.03 என்ற பவுலிங் சராசரி என்ற புள்ளி விவரங்கள் அவருடைய டி20 கேரியரை மோசமாக காட்டுகிறது.

Angelo Mathews 199.jpeg

அதை விட இளம் அதிரடி வீரர்களை தேடும் ஐபிஎல் அணிகள் ஏற்கனவே 35 வயதை கடந்து விட்ட இவரை அடிப்படை விலைக்கு கூட வாங்காது என்று நிச்சயமாக சொல்லலாம்.

Advertisement