டி20 சர்வதேச போட்டிகளில் அதிவேக சதமடித்த 5 அதிரடி பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Rohith
- Advertisement -

டி20 போட்டிகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று சிரமமான விஷயம். ஆனால் அதிலும் கூட அதிரடியாக விளையாடி சதங்கள் அடித்து இருக்கிறார்கள். அப்படி டி20 சர்வதேச போட்டிகளில் அதி வேகமாக சதம் அடித்துள்ள வீரர்களின் பட்டியல்.

Miller

- Advertisement -

டேவிட் மில்லர் :

தென் ஆப்பிரிக்காவின் இடதுகை அதிரடி வீரரான இவர் 2017-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் டேவிட் மில்லர்.

ரோகித் சர்மா :

- Advertisement -

இந்திய அணியின் அதிரடி வீரரான இவர் சதம் அடிப்பதற்கு பெயர் போனவர். 2017 ஆம் ஆண்டு தனக்கு பிடித்த எதிரணி அணி இலங்கை அணியை அடித்து துவம்சம் செய்தார். இந்த போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ரோகித் சர்மா.

சுமேஷ் விக்ரம சேகரா :

- Advertisement -

இவர் இலங்கை நாட்டுக்காரர். ஆனால் சிசெக் ரிபப்ளிக் அணிக்காக விளையாடி வருகிறார். துருக்கி அணிக்கெதிராக 2019ஆம் ஆண்டு வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி இந்த பட்டியலில் இடத்தைப் பிடித்தார்.

சிவக்குமார் பெரியாழ்வார் :

- Advertisement -

இவர் இலங்கையை சேர்ந்த தமிழர் ஆவார். தற்போது ரோமானிய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவரும் 2019ஆம் ஆண்டு துருக்கி அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

ஹெச்ஜி முன்சே :

இவர் ஸ்காட்லாந்து வீரராவார் 2019ஆம் ஆண்டு டப்லின் நகரத்தில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசி இந்த பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Advertisement