சோயிப் அக்தரின் (161.3 கி.மீ) அதிவேகப்பந்து வீச்சு சாதனையை முறியடிக்க தகுதியான 5 பாஸ்ட் பவுலர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

சோயப் அக்தர் 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றிலேயே வேகமான பந்தை வீசினார். கிட்டத்தட்ட 100 மைல் வேகத்தில் 161.3 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருந்தார். இந்த சாதனையை தற்போது வரை யாராலும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், தற்போது உள்ள பந்துவீச்சாளர்கள் யார் யார் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

stanlake

பில்லி ஸ்டான்லேக் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பந்து வீச்சாளர் ஆவார் 26 வயதுதான் ஆகிறது. ஆனால், இவரது உயரம் தான் இவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆகும். தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசுவதில் வல்லவர். ஐபிஎல் போட்டிகள் கூட 151.38 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தினர். இன்னும் சில வருடங்கள் காயமில்லாமல் ஆடினார் என்றால் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் சோயப் அக்தரின் வேகத்தை மிந்தி விடுவார் இவர்.

PatCummins

பாட் கம்மின்ஸ் :

- Advertisement -

இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். தற்போது உள்ள பந்துவீச்சாளர்களில் மூன்று விதமான போட்டிகளிலும் சரியாக பந்துவீச கூடிய வீரர் இவர். 18 வயதிலேயே ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான அந்த வயதிலேயே 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுகிறார் . தற்போது இவருக்கு 28 வயதாகிறது. இவர், வீசிய பந்துகளிலேயே கிட்டத்தட்ட 20 சதவீத பந்துகள் அனைத்தும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசியது. இவர் நினைத்தார் இன்னும் சில வருடங்களில் அந்த சாதனையை முறியடிக்க பட வாய்ப்பு இருக்கிறது.

Archer

ஜோஃப்ரா ஆர்ச்சர் :

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் இங்கிலாந்திற்கு வந்து குடியுரிமை பெற்று தற்போது இங்கிலாந்தில் விளையாடி வருபவர். இவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக ஓடி வந்து சிரமமில்லாமல் பந்து வீசுவதில் இவர் கெட்டிக்காரர் அப்படி வீசியும் கூட ஒவ்வொரு பந்தும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது 152.39 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மேல் வீசி எறிந்தார். தற்போது இவருக்கு 26 வயதுதான் ஆகிறது தொடர்ந்து இப்படியே வீசிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் சோயப் அக்தரின் சாதனையை இவரால் அனாசயமாக முறியடிக்க முடியும்.

Rabada

காகிசோ ரபாடா :

- Advertisement -

23 வயதிலேயே 30 டெஸ்ட் போட்டிகளிலும் 40 ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்க அணிக்கு ஆடியவர். மேலும், 250 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இவை, அனைத்தும் இவரது 150 கிலோமீட்டர் வேகப்பந்து வீசியதால்தான் சாத்தியமானது. தற்போது இவருக்கு 26 வயதுதான் ஆகிறது இதே வேகத்தில் வீசிக்கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் சோயப் அக்தரின் சாதனை எல்லாம் தவிடு பொடியாகிவிடும்.

Starc

மிட்செல் ஸ்டார்க் :

சமகாலத்தில் உள்ள மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று சொல்வதற்கு முழுத்தகுதி உடையவர். இவர் தான் ஏற்கனவே 160 கிலோமீட்டர் வேகத்தை கடந்துவிட்டார். இவரது அதிவேக பந்துவீச்சு 160.40 மீட்டர் வேகம் ஆகும். தற்போது இவருக்கு 31 வயதாகிறது. அவ்வப்போது 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசியும் வருகிறார். இன்னும் சில வருடங்களில் சோயப் அக்தரின் சாதனை எல்லாம் தவிடு பொடியாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Advertisement