சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக ரன் ஓடக்கூடிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

kohli

கிரிக்கெட்டில் வேகம் எப்பொழுதும் முக்கியம் பந்தை பிடிக்கும் போதும், பந்தை வேகமாக எறியும் போதும், வேகம் எப்போதும் மிகப் பெரிய முக்கியத்துவம் தரும் அதிலும் ரன் ஓடும் பொழுது மிகவும் வேகமாக இருக்க வேண்டும். ஒரு ரன் எடுக்கும் இடத்தில் வேகத்தினால் 2 ரன் எடுத்தால் அது தான் கூடுதல் லாபம். அப்படி தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் இருக்கும் வேகமாக ஓடும் பேட்ஸ்மேன்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

கேன் வில்லியம்சன் :

தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் இவர் உலகின் மிகச்சிறந்த முதல் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார் இவர். பவுண்டரிகள் அடிப்பதை விட ஒரு ரன் என்ற வேகமாக எடுத்து இருப்பதையே அதிகம் விரும்புவார். அந்த அளவில் வேகமாக ஓடக்கூடிய வரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

pollard 1

கெரோன் பொல்லார்ட் :

- Advertisement -

ஐபிஎல் தொடர்களில் எந்த அளவிற்கு வேகமாக ஓடி வந்து கைப்பிடிக்கிறார் என்பதை நாம் பார்த்திருப்போம். அதே அளவிற்கு ஆடுகளத்தில் ரன் சேர்ப்பதிலும் இவர் கெட்டிக்காரர். எந்த அளவிற்கு சிக்சர் அடிப்பது விரும்புகிறாரோ அதை அளவிற்கு வேகமாக ஓடி இரண்டு ரன் சேர்ப்பதிலும் வல்லவர்.

Jadeja 1

ரவீந்திர ஜடேஜா :

இவரைப் பற்றி பெரிதாக சொல்ல தேவையில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெரிதாக இவர் அணிக்குள் களமிறக்கபடவில்லை. ஆனால் இரண்டு போட்டிகளுக்கு மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார். அந்த இரண்டு போட்டிகளிலும் அருமையாக பீல்டிங் செய்து தனது வேகத்தினால் 45 ரன்களை பீல்டிங்கில் மூலம் மட்டுமே கட்டுப்படுத்தி இருந்தார்

warner

டேவிட் வார்னர் :

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான இவர் இடதுகை பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக ஆடக்கூடிய இவர் அங்கு பவுண்டரிகள் அதிகமாக அடிப்பதை விட ரன்கள் ஓடி எடுப்பதையே அதிகம் விரும்பி இருக்கிறார்.

Kohli 3

விராட் கோலி :

இந்திய அணியின் கேப்டனான இவர் உடல் தகுதியில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர். இவர் கேப்டன் ஆனதிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் இவரது பிட்னஸ் அளவில் இருக்க வேண்டும் என்று கடுமையான விதிகளை அமல்படுத்தி இருக்கிறார். இவரும் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் மிக அதிகமாக இயங்கக் கூடியவர் ஆவார்.