ஐ.பி.எல் வரலாற்றில் அதிவகமாக பந்து வீசிய 5 பந்து வீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

Bowlers

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகம் இருப்பதால் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் எப்போதும் சற்று குறைவாகத்தான் இருக்கும் அப்படி இருந்தும் பல பந்துவீச்சாளர்கள் பல நேரங்களில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். தற்போது இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக வேகத்தில் பந்து வீசிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்

rabada2

காகிசோ ரபாடா :

இவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் இளம் வீரரான இவர் டெல்லி அணிக்காக விளையாடிவருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக 12 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் கடந்த வருடத்தில் ஒரு போட்டியில் 153.50 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார்

Cummins 1

பேட் கம்மின்ஸ் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆவார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ராயல் சாலஞ்சர்ஸ், பெங்களூரு, டெல்லி போன்ற ஆடியிருக்கிறார். இந்தாண்டு மீண்டும் கொல்கத்தா அணிக்காக அதிகவிலைக்கு ஏலம் போன இவர் கடந்த வருடம் 153.56 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார்.

காகிசோ ரபாடா :

அதிவேகமாக பந்துவீசி இந்த பட்டியலில் மீண்டும் தனது இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் கடந்த வருடம் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 153. 91 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார்.

RABADA

காகிசோ ரபாடா :

இந்த பட்டியலில் மீண்டும் தனது இடத்தை பிடித்திருக்கிறார் காகிசோ ரபாடா தொடர்ந்து அதிவேகமாக பந்துகளை வீசி தனது பெயரை பதிவு செய்து கொண்டே இருக்கும் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆண்ட்ரு ரசலுக்கு 154 .23 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.

Steyn

டேல் ஸ்டெயின் :

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வருடம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடினார். அப்போது 154.40 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.