சர்வதேச அளவில் ஜாம்பவான்களாக இருந்தும் ஐ.பி.எல் லில் விளையாடாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rahim
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் போன்ற அணி வீரர்களும் இருந்தார்கள். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளின் வீரர்களை ஐபிஎல் தொடரில் அதிகம் விளையாடுகின்றனர். ஒரு காலத்தில் இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் கூட விளையாடி இருக்கின்றனர். சொல்லப்போனால் ஜிம்பாப்வே அணி வீரர்களும் விளையாடி இருக்கின்றனர். தற்போது அப்படி பிரபலமாக இருந்தும் ஐ.பி.எல் தொடரில் விளையாடாத வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

broad

- Advertisement -

ஸ்டூவர்ட் பிராட் :

இவர் இங்கிலாந்து அணியின் வீரர் ஆவார் 2011 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கப்பட்ட அந்த வருடம் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை அதற்கு அடுத்த வருடம் இவருக்கு காயம் ஆகிவிட்டது அப்போதிலிருந்தே தற்போது வரை இவரை எந்த ஒரு அணியும் எடுக்கவில்லை

Mahmudullah 3

முகமதுல்லா :

- Advertisement -

இவர் வங்கதேச அணியின் வீரர் ஆவார். சர்வதேச அணியிலிருந்து ஐபிஎல் தொடரில் ஆடிய வெகுசில வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எடுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை

lara

பிரையன் லாரா :

- Advertisement -

இவர் 2007 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். ஆனால் திடீரென 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பாக தனது பெயரை பதிவு செய்து இருந்தார். அப்போது இவருக்கு 42 வயது ஆகியிருந்தது இதன் காரணமாக நன்றாக விளையாடிய வீரராக இருந்தாலும் எந்த ஒரு அணியும் இவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.

Kevin

கெவின் ஓ பிரையன் :

- Advertisement -

அயர்லாந்து வீரரான இவர் மிகவும் அதிரடியாக ஆடக்கூடியவர். 2008 ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை தனது பெயரை மீண்டும் மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துகொண்டே இருந்தார் ஆனால் ஒரு அணியும் இவரை எடுக்கவில்லை.

Rahim

முஷ்பிகுர் ரஹீம் :

இவர் வங்கதேச வீரர் ஆவார். கடந்த பத்து வருடமாக ஐபிஎல் தொடரில் தனது பெயரை கொடுத்துக் கொண்டே இருந்தாலும் இவரை ஒரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இது பற்றி அவர் கவலை படுவதாகவும் தெரியவில்லை.

Advertisement