அதிக விலைக்கு ஏலம் போகி இந்த வருடம் மொத்தமாக சொதப்பிய 5 சொதப்பல் மன்னர்கள் – லிஸ்ட் இதோ

Ipl-batsman

செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட பாதி முடிவடைந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 10 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் இந்த வருடம் நன்றாக விளையாடுவார்கள் என்று பல கோடிகள் கொடுத்து ஒரு சில வீரர்கள் எடுக்கப்பட்டனர். அப்படி இருந்தும் அவர்களால் சரியாக விளையாட முடியவில்லை அப்படி ஏமாற்றம் அளித்த வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்

Cummins

பேட் கம்மின்ஸ் :

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் கொல்கத்தா அணிக்காக 15.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார். இத்தனை கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்ட வெறும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 126 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

Maxwell

க்ளென் மேக்ஸ்வெல் :

- Advertisement -

பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான இவர் இந்த வருட ஏலத்தில் கிட்டத்தட்ட 10.7 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த முறை பஞ்சாப் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடியுள்ள க்ளென் மேக்ஸ்வெல் 58 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதிலும் ஒரு போட்டியில் கூட ஒரு சிக்சர் கூட இவரு அடித்தது இல்லை என்பது முக்கிய தகவல்.

Cottrell

செல்டன் காட்ரெல் :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவரை பஞ்சாப் அணி 8.5 கோடி கொடுத்து எடுத்தது. முதலில் நன்றாக விக்கெட்டுகள் வீழ்த்திய இவர் மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விட்டுக் கொடுத்ததும் இவர்தான்.

Uthappa

ராபின் உத்தப்பா :

தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக பல வருடங்கள் பல ஆயிரம் ரன்களை குவித்தவர். இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 3 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இவர் 7 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

Neesham

ஜேம்ஸ் நீசம் :

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் இவரையும் பஞ்சாப் அணி 50 லட்சம் கொடுத்து எடுத்தது. இவருக்கு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுத்தாலும் அந்தப் போட்டிகளில் சரியாக செயல்பட முடியவில்லை இவரும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.