தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்து சிதறக்கூடிய 5 அதிரடி பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

hitter
- Advertisement -

கிரிக்கெட் தற்போது பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மாறிவிட்டது. பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற விதிகளும் அதிகமாக வகுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அதிகம் மைதானங்களில் கூடுவார்கள். இந்நிலையில் இந்த விதிகளைப் பயன்படுத்தி பல பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட தொடங்கிவிட்டனர். வித்தியாசமாகவும் அதிரடியாகவும் ஆடும் 5 வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

buttler

- Advertisement -

ஜாஸ் பட்லர் :

இங்கிலாந்து அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். இங்கிலாந்தில் நீண்ட கால விக்கெட் கீப்பர் தேடுதலுக்கு இவர் விடைகொடுத்தார். துவக்க வீரராக ஆடுவதாக இருந்தாலும் சரி கடைசியில் இறங்கி அதிரடியாக ஆடுவதாக இருந்தாலும் சரி இங்கிலாந்து அணி எப்போதும் இவரை களம் இறக்கி விடும். அந்த அளவிற்கு அதிரடியாக ஆடுவதில் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி 41 ஆக இருந்தாலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 120 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் தனது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக வைத்துள்ளார். தற்போதைய கிரிக்கெட் டில் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Warner

டேவிட் வார்னர்

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமானவர் இவர். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. இடதுகை சேவாக் என்றும் இவரை அழைக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 72 ஆக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக ஆடுவதையே இவரது வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 95.6 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் சொல்லவே தேவையில்லை 140க்கு மேல் வைத்துள்ளார். மொத்தமாக சர்வதேச அரங்கில் 15 ஆயிரம் ரன்களையும் குவித்துள்ளார். மேலும் 43 சதங்களை விளாசியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் மிகச்சிறந்த அதிரடி வீரர்களில் இவரும் ஒருவர்.

rohith 1

ரோகித் சர்மா :

- Advertisement -

2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட அறிமுகமானார். 2013ம் ஆண்டிலிருந்து தொடக்க வீரராக ஆடி வருகிறார். இவர் ஆடுவதை பார்த்தால் மிகவும் இலகுவாகத்தான் இருக்கும் . ஆனால் இவரது ஆட்டம் மிகவும் அதிரடிதான். ஒருநாள் போட்டிகளில் 7 முறை 150 ரன்களுக்கு மேலாக விளாசியுள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் இப்படி அடிக்க வில்லை. மேலும் மூன்று இரட்டை சதங்களையும் அடித்து துவம்சம் செய்துள்ளார். அதிரடியாக ஆடுவதில் வல்லவராக இருக்கும் இவர் மொத்தம் 39 சதங்கள் விளாசியுள்ளார். கிட்டத்தட்ட சர்வதேச அரங்கில் 14 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் மிகச்சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் இவராவார்.

russell

ஆன்ட்ரே ரஸல் :

- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக தனது 21 வயதில் அறிமுகமானவர். இவர் ஆல்-ரவுண்டராக அறிமுகமாகி தற்போது ஆக்ரோசமாக ஆடும் அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். சொல்லப் போனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 10 வருடங்களில் இவர் பெரிதாக ஆடியதில்லை. ஆனால் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார். உதாரணமாக 64 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 1400 ரன்களை குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் வேறு யாருக்கும் இல்லாத வகையில் 186.4 ஆக இருக்கிறது. சந்தேகமே இல்லாமல் இந்த காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி வீரர்கள் பட்டியளில் இவர் இடம் பிடிக்கலாம்.

Rahul

கே.எல் ராகுல் :

தற்போது இவருக்கு 28 வயதாகிறது. 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இவரது ஆட்டம் மெச்சத்தக்கதாக இருந்தாலும். இந்திய அணிக்காக தொடர்ச்சியாக நன்றாக ஆடவில்லை என்பதற்காக அணிக்கு வெளியே தள்ளப்பட்டார். அதன் பின்னர் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து பட்டையை கிளப்பி வருகிறார். டி20 ஸ்ட்ரைக் ரேட் 146 இருக்கிறது 42 போட்டிகளில் ஆடியுள்ளார் 1461 ரன்களை குவித்துள்ளார் இதன் சராசரி 45.6 ஆக வரும் அதிரடி வீரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கலாம்.

Advertisement