போட்டிக்கு முன் சரக்கு அடித்து விட்டு போதையில் போட்டியில் பங்கேற்ற 5 சர்வதேச வீரர்கள் – லிஸ்ட் இதோ

drunk
- Advertisement -

கிரிக்கெட் தொடரில் தனது பேட்டிங், பவுலிங் அல்லது பீல்டிங் திறமையால் பலர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். இவ்வாறு பல சாதனை படைத்த முக்கிய வீரர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இதில் களத்திற்கு வந்து விளையாடும் முன் மது அருந்திவிட்டு விளையாடிய 5 ஜாம்பவான்கள் யார் என்பதை பார்ப்போம்.

Raja

- Advertisement -

வாசிம் ராஜா :

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர். 1985ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமானவர். தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதம் மற்றும் 20 அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் 1985ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெறும் வரை கிரிக்கெட் விளையாடுவதற்க்கு முன்பு எப்போதும் மது அருந்திருப்பார் என்பது தெரியவந்தது.

Gibbs

கெர்ஷல் கிப்ஸ் :

- Advertisement -

இவர் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர். 1996ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானவர். தனது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் மற்றும் 63அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் 15000 ரங்களுக்கு மேல் விளாசியுள்ளார். ஆனால், இவரது சுயசரிதியான “டூ தி பாய்ன்ட்” என்ற புத்தகத்தில்அவர் விளையாடுவதற்கு முன் மது அருந்துவதாக கூறியுள்ளார்.

symonds

ஆன்ரூ சைமன் :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். 1998ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானவர். தனது ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 48 சதம் மற்றும் 105 அரை சதங்களும் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் 2003 ஆம் ஆண்டுகளில் மிகவும் திறமையான ஆல்ரவுண்டர் வீரராக திகழ்ந்தவர். இவர் இரண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். ஆனால் குடிப்பழக்கத்தினால் இவர் கைகலப்பு, சண்டை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Flintoff

அன்ட்ரூ பிளின்டாப் :

- Advertisement -

இவர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். 1998ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியில் அறிமுகமானவர். தனது ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 சதம் மற்றும் 44 அரை சதங்களும் அடித்துள்ளார். ஒருமுறை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்தார். அப்போது இவர் அளித்த பேட்டியில் மது அருந்தியதால் தான் என்னால் சதம் அடிக்க முடிந்தது என்று கூறியிருந்தார்.

ryder

ஜெஸ்ஸி ரைடர் : :

இவர் நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்.2008ஆம் ஆண்டில் நியூஸிலாந்து அணியில் அறிமுகமானவர். தனது ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 சதம் மற்றும் 52அரை சதங்களும் அடித்துள்ளார். இவர், பிரண்டன் மேக்கல்லம் உடன் தொடக்க வீரராக களமிறங்கியவர். தனது குடிப்பழக்கத்தினால் பல போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

Advertisement