ஐ.சி.சி.வெளியிட்ட சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Batsman
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறந்த ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை தேர்வு செய்து அறிவித்திருந்தது. அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, எம்எஸ் தோனி, பும்ரா ஆகிய இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். அதுமட்டுமின்றி இந்த தசாப்தத்தின் ஐசிசி அணியில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனி கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். இதோடு சேர்த்து ஐசிசி கடந்த தசாப்தத்திற்கான ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த வீரரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஐசிசியின் இந்த தசாப்தத்தின் ஐசிசி அணியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று சோயிப் அக்தர் விமர்சித்தும் இருந்தார். இந்த ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஐந்து முக்கிய வீரர்கள் பற்றி பார்ப்போம். இவர்கள் 5 பேரும் டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டிய தகுதி உடையவர்கள் என்பது எங்கள் கருத்து.

- Advertisement -

Younis 1

யூனிஸ் கான் – பாகிஸ்தான் :

பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் இந்த தசாப்தத்தில் 2011 ஆண்டிலிருந்து 2017 ஆம் ஓய்வு பெறும் வரை டெஸ்ட் வடிவத்தில் இருந்தார். இந்த தசாப்தத்தில் இவர் 97 போட்டிகளில் விளையாடி 4659 ரன்கள் குவித்துள்ளார். 2011 முதல் 2017 வரை டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 54.17 பெற்றிருக்கிறார். இந்த காலகட்டத்தில் 4 இரட்டை சதங்களையும் அடித்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரர் கூட அந்த ஐசிசியின் அணியில் இடம்பெறவில்லை.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ் – தென்னாப்பிரிக்கா :

தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2011 ஆண்டிலிருந்து 2018 ஆண்டில் டெஸ்ட் வடிவமைப்பில் இருந்து ஓய்வு பெறும் வரை சிறந்த வீரராக இருந்தார். ஆனால் ஐசிசி வெளியிட்ட கடந்த தசாப்தத்தின் அணியில் இவர் இடம் பெறாதது பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இவர் 80 போட்டிகளில் விளையாடி 4063 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் 10 சதம் மற்றும் 23 அரை சதத்தையும் இந்த தசாப்தத்தில் குவித்துள்ளார்.

- Advertisement -

lyon 2

நாதன் லியோன் – ஆஸ்திரேலியா :

2011 மற்றும் 2020க்கு இடையில் விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் 394 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், நாதன் லியோன் வெள்ளையர்களில் ஒரு மகத்தான வீரராக உருவெடுத்துள்ளார். இந்த டெஸ்டில் தசாப்தத்தில் எந்த சுழற்பந்து வீச்சாளரும் இவரை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இந்த தசாப்தத்தில் லியோன் 18 ஐந்து விக்கெட்டுகள் மற்றும் 3 பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் ஐசிசியின் இந்த டெஸ்ட் சகாப்தத்தில் லியோன் இடம்பெறவில்லை.

- Advertisement -

Root

ஜோ ரூட் – இங்கிலாந்து :

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த தசாப்தத்தின் ஐ.சி.சி டெஸ்ட் அணியில் நிச்சயமாக குறிப்பிடப்பட வேண்டியவர்.ஆனால் இவர் இந்த தசாப்தத்தின் ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. இவர் 177 இன்னிங்ஸ்களை விளையாடி 7823 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ரூட் 17 சதங்கள் மற்றும் 49 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

amla1

ஹாஷிம் அம்லா – தென்னாப்பிரிக்கா :

ஹாஷிம் அம்லா, இந்த தசாப்தத்தில் 2011 ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரராக இருந்தார். இவர் 16 சதங்கள் மட்டும் 23 அரை சதங்கள் உட்பட 5446 ரன்களை குவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவர் மூன்று இரட்டை சதங்களை விளாசியுள்ளார். 2012ம் ஆண்டு 311 ரன்களை குவித்துள்ளார். ஆனால் இவர் இந்த தசாப்தத்தின் ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக 9282 ரன்கள் எடுத்ததில் அம்லா இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement